Tuesday, September 2, 2014

அமெரிக்க இதழில் இடம்பிடித்த கோவைத் தமிழன்

கோவை மாநகருக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்..!!

உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக, அமெரிக்காவின் 'டைம்ஸ்' பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் நரேந்திர மோடி, அருந்ததிராய், கெஜ்ரிவால் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் பட்டியலில் சேர்ந்துள்ளார் கோவையில் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த முருகானந்தம். இவருக்கு வயது 49.

அப்படி என்ன கண்டுபிடித்தார்..

பெண்கள் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை மலிவு விலையில் தயாரித்து, ஏழைப் பெண்களும் பயன்படுத்தும் அற்புதத்தை நிகழ்த்தியதோடு, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார். "என்னோட விடா முயற்சியில, வெளிநாட்டுக் கம்பெனிகள் பயன்படுத்துவது 'பைன்' மரத்திலி ருந்து வரும் ஒருவகை பஞ்சுனு தெரிஞ்சது. உடனே 'பைன்' மரப்பஞ்சை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தேன். பத்து வருட கடும் போராட்டத் -திற்குப் பிறகு மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். பலரும் உபயோகித்துப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகக் கூறினர். என் பல வருடக் கனவு நிறைவேறியது.

நான் தயாரிச்ச இயந்திரத்தை பெண்களே சுலபமா இயக்கி நாப்கினைத் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். இந்தத் தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தார் கள். கடந்த 2005 - ம் ஆண்டில் ஐ.ஐ.டி. 'சமூக மாற்றத்திற்கான சிறந்த கண்டுபிடிப்பு' என என் கண்டுபிடிப்பைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து 'ஜனாதிபதி விருது' பெற்றேன் என்றார் சாதனையாளர் முருகானந்தம். சமூகத்திற்கு இவர் ஆற்றும் தொண்டிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அணையாடைகளை (Sanitary 
Napkin) சிற்றூர்களில் செயல்முறைகளைக் காட்டி மலிவான தீர்வைக் காண கடின உழைப்பால் எளிய வழிமுறை இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
அதற்கான காப்புரிமை பெற்றுள்ளார். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி இந்த இயந்திரங்களை இந்தியா முழுதுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இதன் மூலம் பெண்கள் வேலை வாய்ப்பும் பெறுவதோடு வறுமையிலிருந்தும் மீள்கின்றனர்..!!