Thursday, January 11, 2024

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில்..

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்த இடமுடன் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் நீலிமா இசை திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவிலுக்கு 2021ம் வருடம் வருகை தந்த மஹாசிவராத்திரி விழாவிற்கு விஜயாமாகி காக்கும் தெய்வம் காளியுடன் இணைந்து பரமேஸ்வரன் இரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய வரலாற்றினை தன்னுடைய @Neels (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அழகுற பேசுகிறார்.  


இறைவன் பெயர்.. ஆலங்காட்டு அப்பர் 
இறைவி பெயர்.. பிரம்மராளகாம்பால், வண்டார்குழலி 
மஹாசிவராத்திரி நாள்.. மார்ச் 11

பரமேஸ்வரன் காளியுடன் நடனமாடிய தலம். காக்கும் தெய்வமான காளி அன்னை உக்கிரமாக இருந்தபோது முஞ்சிகேச கார்க்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பரமேஸ்வரன் காளியுடன் நடனமாடி ஊர்த்துவ தாண்டவத்தால் வென்று காளியின் கோபத்தை தணித்தார். பரமேஸ்வரன் காளிக்கு அருள் செய்து வடாரண்யேசுவரராக எழுந்தருளி உள்ளார். இக்கோவிலுக்கு அருகில் காளிக்கு தனிக்கோவில் உள்ளது. 


பரமேஸ்வரனுடைய ஐம்பூத ஸ்தலங்களில் தண்ணீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஊரிலுள்ள ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு, கடந்த வருடம் டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் விஜயமானபோது, அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு செல்லும் பிரகாரத்தின் வழியில் வலதுபுறமாக உள்ள தூணில் ஆலங்காட்டு காளியின் சிற்பத்தின் எதிரில் ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனின் சிற்பத்தைக் கண்டு பிரமித்த வேளை, இரண்டு சிற்பத்திற்கும் நடுவில் அமர்ந்து மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் பாடல்களை அரை மணி நேரம் வாசித்து மகிழ்ந்தது.


ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனின் சிற்பத்திற்கு அருகில் எதிர்புறம் அமைந்த தூணில் பரமேஸ்வரனுடன் நடனமாடும் காளியின் சிற்பமும் இருப்பதை பார்த்த வேளை, அன்னை அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களில் நூற்றுக்கணக்கான பேர் காளியின் சிற்பத்தினை தொட்டு வணங்கியதை கண்டு பெரும் வியப்பாக இருந்தது.

Friday, January 5, 2024

டைம் டிராவல் @பில்கேட்ஸ்..

இயக்குநர் செல்வராகவன் @மார்க் ஆண்டனி படத்தில் சயின்டிஸ்ட் சிரஞ்சீவி எனும் கேரக்டரில் டைம் டிராவல் போனை கண்டுபிடிக்கும் ஓபனிங் காட்சியை  பார்க்கும் நம்மை பிரமிக்க வைக்கும்.

கடந்த வருடம் செப்டம்பர் 14 அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "மார்க் ஆண்டனி" படத்தின் ஓபனிங் காட்சியில், சயின்டிஸ்ட் சிரஞ்சீவி கண்டுபிடித்த டைம் டிராவல் போன் கொண்டு கடந்த காலத்திற்கு பயணம் செய்யும் வேளை, பில்கேட்ஸ் எனும் இளைஞன் தனது நண்பன் பால் ஆலனுடன் இணைந்து 1975ம் வருடம் ஏப்ரல் 04 தேதியில் மைக்ரோசாஃப்ட் கம்பெனியை தொடங்கிய வேளையில், என்னையும் உங்கள் நண்பனாக இணைத்துக் கொண்டால் வரலாற்றில் எனக்கும் ஒரு இடம் கிடைக்குமே என்ற மகிழ்ச்சி வெள்ளம்.. மார்க் ஆண்டனி படத்தின் ஓபனிங் காட்சியின்போது மனதில் எண்ணங்களாக உருவாகி காவிரி நதியின் வெள்ளம்போல பொங்கிப் பெருகியது.  

குறிப்பு: டைம் டிராவல்.. நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு பயணமாகச் செல்வது, கடந்த காலத்தின் ஏதேனும் ஒரு வருடத்தின் ஒரு நாளிற்கு போன் செய்து உறவினர், நண்பர் அல்லது எவரோ ஒருவருடன் பேசுவது..