Wednesday, March 26, 2014

இலட்சியத்திற்கான தியாகம்!!

சிந்து நதிக்கரையில் போரஸ் மன்னனை
வீழ்ச்சி அடைய வைத்து விட்டு நிமிர்ந்து நின்றார்
அலெக்சாண்டர்...

படைகள் தளர்ச்சி அடைந்தன.
படைகளைத் திருப்பலாம் என மன்னனிடமும் முறையிட்டனர்..

"இந்தியா முழுவதையும் வென்று விட்ட பிறகே
தாய் நாடு திரும்புவேன்" என்பதில் உறுதியாக இருந்தார்
அலெக்சாண்டர்...

படை ராஜஸ்தானில் மாட்டிக் கொண்டது:
அனைவரும் தங்களுக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தனர்..

இரக்கம் அற்றவர்; இதயத்தை ஏதன்சிலேயே இறக்கி வைத்தவர்..
இப்படித் திட்டிக் கொண்டே நடந்தனர்..

அப்போது ஒரு பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர்
இருப்பதைக் கண்ட வீரன்...
மணலில் இருந்து அதைப் பிரித்து, தம் இரும்புத் தொப்பியில்
அள்ளி தம் தலைவனிடம் நீட்டினான்..

அலெக்சாண்டர் சொன்னார்:
இந்தத் தண்ணீரை விட ஈரப்பசை மிக்க
உள்ளம் வாய்ந்த என் அன்புத் தோழனே! நன்றி..
எல்லோரும் குடிக்க நீர் இருந்து, குடித்த பின்
எஞ்சியிருந்தால் மட்டுமே நான் குடிப்பேன்...
இல்லையேல் எல்லோரோடும் சேர்ந்து இறந்துபோவேன்"..
வீரர்கள் சிலிர்த்தனர்; தம் தலைவனைப் புகழ்ந்தனர்...!

Wednesday, March 19, 2014

மார்ச் 20 - சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்

ஸ்ஸ்ஸ்...அப்பாடா! என்ன வெயில்!! மனுசன் நடக்கவே முடியல...!
கொஞ்சம் தண்ணீர் கொடுங்க...!

இப்படிக் கூறாத மனிதர்கள் இல்லை.
ஆம்..வெயிலின் கடுமை
அனைவரையும் வாட்டுகிறது...


நமக்கெல்லாம் தண்ணீர் தர நமது சொந்தங்கள், நண்பர்கள் என பலர் உள்ளனர். தண்ணீர் இருக்கும் இடம் தேடி அலையவோ, ஏன்.. காசு கொடுத்துக் கூட தாகம் தணிக்க நம்மால் முடியும்.

ஆனால்...எண்ணற்ற காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் இந்தக் கோடையின் வெப்பம் தாங்காமல் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் தாகத்தினைத் தீர்க்க நாமும் உதவலாமே...

எப்படி..?

தாகத்துக்காக தண்ணீரைத் தேடி அலையும் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் மடிந்து போய்விடும் கொடுமைகள் நடப்பதைத் தடுக்கும் விதமாக நாம், நமது வீட்டின் கூரை மீது, மொட்டை மாடியின் மீது சிறு சிறு குவளைகளில் நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்த்து அவற்றைக் காப்போம். இந்தப் புனித பணியினை இந்தக் கணமே செய்வோமா!!...

இந்தப் புனித பணியில் நீங்களும் பங்குகொள்ள, உங்களால் முடிந்த அளவு இந்தப் பக்கத்தை பிரதி எடுத்து உங்கள் பகுதியில் விநியோகித்து, பறவைகளின் தாகம் தீர்க்க மற்றவர்களை உதவச் செய்யலாமே...
மேலும் இந்தப் பக்கத்தை உங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்...!