Monday, June 23, 2014

லோட்டஸ் தொலைக்காட்சியில் நான் ஆற்றிய உரை - 22.06.14 - ஞாயிறு

கோவை மாநகரில் செயல்படும் லோட்டஸ் தொலைக்காட்சி சேனலில் அக்குவேர் ஆணிவேர் என்ற விவாதமேடை நிகழ்ச்சியில் "எதிர்கால இந்தியாவை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்..? என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். ஐநூறு பேர்கள் கலந்து கொண்டவர்களில் முதலிடம் பிடித்து நிகழ்ச்சியில் தேர்வானேன். இன்னும் ஓரிரு வாரங்களில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு ஆகும். 2008 ம் ஆண்டு என்.ஜி.பி.கல்லூரி மாணவர்களுடன் சென்னையிலுள்ள ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்ற மெகா டிவி சேனலில் கலந்து கொண்டு முதல் முறையாக உரையாற்றினேன். இன்று வரைக்கும் அந்த உரைக்கு நண்பர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த உத்வேகம்தான் என்னை ஒவ்வொரு நாளும் இயக்கிக்கொண்டே இருக்கிறது..!!

லோட்டஸ் தொலைக்காட்சியில் நான் ஆற்றிய உரையை வலைப்பூவான www.senthilkumarvision.tumblr.com என்ற இணையதளத்தில் ஆடியோ பதிவை பதிவேற்றம் செய்துள்ளேன்..!!

Thursday, June 19, 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இல்லாத அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி கிராமம் தேர்வு..!!


11.06.14 தேதியன்று கிராமத்து வலைப்பூவில் பதிவு செய்த கட்டுரை..!!

நமது கிராமத்தில்  கருப்பசாமி யாதவ், கருப்பாயி அம்மாள் அவர்களின் புதல்வர் கண்ணன் அவர்கள் கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருடன் உடன் பிறந்த சகோதரி காளீஸ்வரியும்  நானும்  ஒரே வயதுள்ளவர்கள். கண்ணன் என்னை விட மூன்று வயது இளையவர். இந்த வலைப்பூவை தொடங்குவதற்கு முன்பு கிராமத்தின் கடந்த காலத்தைப் பற்றி நிறைய பேசி இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்திருக்கி றோம். இணையதளத்தில் நமது கிராமத்திற்கென்று வலைப்பூ உருவாக்கி, உலக அளவில் கவனத்தைப் பெறுவதற்காக கடுமையான உழைப்பை செலுத்த உள்ளேன். நமது கிராமம் இந்திய அரசின் தேசிய விருதையும், சிறந்த இலக்கியப் படைப்புள்ள வரலாற்று ஆவணம் மற்றும் பாரம்பரிய வரலாறு கொண்ட கிராமமாக உருவாக்க முயற்சி செய்யப் போகிறேன் என்று எனது தந்தையார் காலமான ஒரு மாதம் கழித்து, கண்ணனுடன் ஒரு மாலைப் பொழுதில் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னேன். இதைச் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல..!! நிறைய மெனக்கெட வேண்டும். பொருட்செலவு என்பதை விட அதிக நேரம் கிராமம் குறித்து சிந்தித்து, பழைய கால நினைவுகளை பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து, வரலாற்றுக் காவியம் எழுத வேண்டும். மக்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியமான சான்றுகள். நாம் இந்த பூமியை விட்டுச் செல்லும் வரை பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு மாபெரும் காலப்பெட்டகமாக உருவாகும் என கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். ஆனால் ஏனோ தெரிய வில்லை கண்ணனுடைய புகைப்படத்தை கேமராவில் பதிவு செய்யவே இல்லை. பார்க்கும்போதெல்லாம் பேசிக் கொண்டே மறந்துவிடுவேன். 02.06.14 தேதியன்று கிராமத்து அஞ்சல் துறையின் முன்னோடிகள் என்ற தலைப்பில் தீண்டாமைக் கொடுமை குறித்த கட்டுரையை இந்த கிராமத்து வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புDr.அம்பேத்கார் திரைப்படம் பார்த்த பாதிப்பு என்னுள் வெகு நாட்களாக இருந்து கொண்டே இருந்தது. பல நூற்றாண்டு களாக தலித் மக்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்து விடிவது போல் இருந்தது. இந்த வலைப்பூவில் நான் கட்டுரைகளை பதிவுசெய்யும்போது எந்த மாதிரியான எதிர்மறையான கருத்துக்களையும் பிரதிபலிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். நேர்மறையான ஆக்கப்பூர்வமான கிராமம் குறித்த வரலாற்று செய்திகளை பதிவுசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் இந்த கிராமத்து வலைப்பூ முன்மாதிரியான வலைப்பூவாக இருக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறேன்..!!

வலைப்பூ முகவரி: குளக்கட்டாக்குறிச்சி கிராமம் 

நேற்று காலை வேளையில் திடீரென்று நண்பர் கண்ணன் அலைபேசியில் அழைத்தார். திருநெல்வேலி மாவட்டத் தில் தேர்வு செய்யப்பட 485 கிராமங் களில் நமது கிராமம் தீண்டாமை இல்லாத மத நல்லிணக்கத்துடன் கூடிய கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, 09.06.14 அன்று கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பத்து லட்சத்திற்கான பரிசுத்தொகையைப் பெற்றிருக்கிறார் என்ற செய்தியை சொன்னபோது, எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது. செய்தி தினமணி நாளிதழில் வெளியாகி யிருந்தது. இணைய தளத்தில் திருநெல்வேலி பதிப்பில் செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இந்த விருது ஒட்டு மொத்த கிராம மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம். கிராமத்து மக்களில் நானும் ஒருவன் என்பதில் இதயம் பூரிப்படைகிறது. கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பு பாலசுப்ரமணியம் அவர்களை அலை பேசியில் அழைத்து என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். சிறு வயதிலிருந்தே நீண்ட கால நண்பர். இவருடைய துணைவியார் பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதம் கழித்து, கிராமத்தின் மேம்பாடு குறித்து சில விசயங் களை  பகிர்ந்து கொண்டேன். அதில் ஒன்றுதான் கிராமத்து வலைப்பூ..!!  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே நமது கிராமத்து வலைப்பூ குறித்த செய்தியை கடிதமாக எழுதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். எனது முயற்சிகளுக்கு அவருடைய மின்னஞ்சலில் இருந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். இந்திய அளவில் சிறந்த கிராமமாக தேசிய விருது பெறுவதற்காக மாவட்டக் கருவூலத்திலிருந்து 1750 ம் ஆண்டிலிருந்து 1980 ம் ஆண்டு வரைக்கான கிராமத்தின் பதிவேடுகளை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சென்று பார்த்து விண்ணப்பம் செய்தேன். பிரிட்டீஷ் காலனி ஆட்சி இந்தியாவில் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட கிராமம் குறித்த விவரங்கள் கூடிய விரைவில் கிடைத்துவிடும். பதிவேடுகள் கிடைத்த பின்பு, வரலாற்று ஆவணங்கள் உருவாக்குவதுதான் இமாலயப் பணி..!! தற்போது தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் எழுதிய வரலாற்று ஆவணமான திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலைப் படித்து, அதிலுள்ள குறிப்புகளைக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் கிராமம் குறித்த தகவல்களை பெற்றுள்ளேன். அதை விட ஒரு மாபெரும் இமாலயப் பணி, கிராமத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை உலக வரலாற்றின் பக்கங்களில் காலத்தால் அழியாத பெயராக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது..!! இமாலயக் கனவு நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!!

Sunday, June 15, 2014

நோபல் பரிசைப் பெற்றதால் எழுத முடியாமல் போன எகிப்து எழுத்தாளர்

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நாகூப் மாபொஷ் (1911-2006). அரேபிய முறையில் இவரது படைப்புகள் வெளிவந்து பிரசித்தி பெற்றன. மனிதர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் அளவிற்கு இவரது படைப்புகளில் உண்மை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் காணலாம். இருந்தபோதிலும் இவரது படைப்புகள் மதத்தை நிந்தனை செய்வதாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள் குற்றம் சாட்டி அவ்வப்போது கண்டனக் குரல்களை எழுப்பி வந்தனர்.இந்நிலை யில் நாகூப்பின் இலக்கியத் தொண்டினைப் பாராட்டி 1988 ம் ஆண்டிற்கான இலக்கியத் துறை நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

நோபல் பரிசை அவர் பெற்றதைக் கண்டித்து தீவிரவாதிகள் அவரை கத்தியால் குத்திக் கொள்ள முயற்சி செய்தனர். அதிலிருந்து அவர் எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் அவரது வலது கை நரம்பு துண்டிக்கப்பட்டது. அவர் அதைத் தொடர்ந்து எழுத முடியாத நிலை ஏற்பட்டது. பின் 2006 ம் ஆண்டில் தனது 94 வயதில் காலமானார்..!!

Thursday, June 12, 2014

கால்பந்தாட்ட சகாப்தங்களின் அனல் பறக்கும் ஆட்டத்தைக் காண ரசிகர் பட்டாளங்களே! இன்றிலிருந்து தயாராவோம்!!

கால்பந்தாட்டம் ஒரு மதம் என்றால், பிரேசில் அணியின் சகாப்தம் படைத்த வீரர் பீலே அந்த மதத்தின் கடவுள்!! இன்று வரைக்கும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகன் பீலேதான்!! உலகக் கோப்பையில் சகாப்தம் படைத்த பீலே அவர்களின் தீவிர ரசிகன் நான்..!!


பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக 22 வயதான நெய்மர் வந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது..!!


















Wednesday, June 11, 2014

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்ற வேளையில் - 30.05.14


நான் பல தடவை பேரூரிலுள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அதேபோல் அருகாமையிலுள்ள நொய்யல் ஆற்றின் படித்துறைக்கும் சென்றுள்ளேன். ஆனால் இந்த மூவர் (மகாத்மா காந்தி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன்) அஸ்தியை வைக்கப்பட்ட இடத்தை பார்த்ததில்லை. தற்செயலாக கவனித்தபோதுதான் பார்க்க முடிந்தது. இதற்கு முன்பு இந்த சமாதி இருந்த இடத்தை சுற்றி பந்தல் போடப்பட்டிருந்ததால் தெரிவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மகாத்மா காந்தியின் அஸ்தியை அவர் மரணமடைந்த 1948 ம் ஆண்டு வைத்துள்ளார்கள். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயத் தலமாக பல நூற்றாண்டுகளாக பேரூர் கோயில் இருந்து வருவதால், மூவரின் அஸ்தியை வைத்துள்ளார்கள். மகாத்மா காந்தியின் அஸ்தியை இங்கே வைத்துவிட்டுத் தான், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காந்தியின் மற்றொரு அஸ்தியை வைத்துள்ளார்கள்.. கோவை மாநகருக்கு கிடைத்த சிறப்பு அம்சங்களில், இந்த புனித இடமும் ஒன்றாக இருக்கிறது..!!

நடுவில் இருக்கும் மகாத்மா காந்தியின் அஸ்திக் கும்பம்..











கோவை மாநகரின் தவப்புதல்வர் ஒருவரான இவர் கோயிலுக்கு அருகாமையில் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்தார். நான் சாமி!! என்ன செய்கிறீகள் என்று கூப்பிட்டேன். என்னை யாரென்று திரும்பிப்பார்த்த போது தவப்புதல்வரை புகைப்படம் எடுத்தேன்..!!



நொய்யல் ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள படித்துறைகள்..




பேரூர் கோயில் முன்பு உள்ள தெப்பக்குளம்...


பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள யானை...

Monday, June 2, 2014

கம்பியூட்டர் மூலம் ஒரு இனிமையான காதல்

என் இனிய கம்பியூட்டரே,
            
இது நான் உனக்கு Input ஆக அளிக்கும் Document, இதை Read செய். Delete செய்து விடாதே. நான் உன்னைக் கண்டேன் Windows ல், முதன் முதலாக.. அன்றிலிருந்து நான் தொடங்கிவிட்டேன் உன்னைக் காதலிக்க. நீ வெளியில் வரும்போது நான் Click செய்தேன் என் கண்களைக் கொண்டு...!! அதற்கு இந்த Result - ஐயும் காட்டி விட்டாய், நீ என் மனதில் Lotus போல் பூத்து விட்டாய். நாம் இருவரும் TIDEL Park - ல் சந்தித்தோம். பேசினோம். காதலித்தோம். 

நாம் இருவரும் காதலிப்பது உன் அண்ணன் Electricity - க்கு பிடிக்க வில்லையா? அல்லது உன் தம்பி COBOL - க்கு பிடிக்கவில்லையா? நான் உன் அருகில் Chat - பண்ண வரும் போது Off பண்ணிவிடுகிறான் உன் அண்ணன் Current - ஐ...


உன் Telephone Number 555 எனபதை Directory மூலமும், உனது Home க்குரிய Path - ஐ I Mean Address  உன் File ன் மூலமும் அறிந்து கொண்டேன். நான் முதன்முதலில் உனக்களித்த Love Letter - ஐ Access செய்து Memory Uinit - ல் போட்டாயா? அல்லது Access பண்ணாமல் Recycle Bin - ல் போட்டாயா?
நீ என்னைப் பார்க்காவிடில் ஆகி விடுகிறது என் மனம், சுறுசுறுப்பு ஆரம்ப கால Processor போல. நீ என்னைக் கடைக்கண் பார்வையால் பார்க்கும்போது ஆகி விடுகிறது என் மனம் Pentium 4 Processor போல.


மற்றவர்களின் காதல் கண்களில் தொடங்கி மனதில் முடியும். நம் காதல் மனதில் தொடங்கி கண்களில் முடியட்டும். அதுதான் நம் காதலின் Basic. நம் காதலுக்கு Virus யாருமல்ல...!! நாம் இருவரும் காதல் Language பேசும்போது மூன்றாவது ஆள் எதற்கு? யாரா? அவன்தான் என்றும் உன்னுடன் இருக்கும் Compiler. அவனை நீ Delete செய்து Recycle Bin - ல் போடுவது எப்போது?

உன் தந்தை JAVA - ல் உள்ள MS-Office ல் வேலை பார்ப்பதாக அறிந்தேன். அங்கு சென்று நம் காதலுக்கு ஒரு Powerpoint இடுகிறேன். நான் சென்று திரும்பும் வரை Windows - ல் கண்வைத்து காத்திரு...!! C YOU...!!