நான் பல தடவை பேரூரிலுள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அதேபோல் அருகாமையிலுள்ள நொய்யல் ஆற்றின் படித்துறைக்கும் சென்றுள்ளேன். ஆனால் இந்த மூவர் (மகாத்மா காந்தி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன்) அஸ்தியை வைக்கப்பட்ட இடத்தை பார்த்ததில்லை. தற்செயலாக கவனித்தபோதுதான் பார்க்க முடிந்தது. இதற்கு முன்பு இந்த சமாதி இருந்த இடத்தை சுற்றி பந்தல் போடப்பட்டிருந்ததால் தெரிவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மகாத்மா காந்தியின் அஸ்தியை அவர் மரணமடைந்த 1948 ம் ஆண்டு வைத்துள்ளார்கள். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயத் தலமாக பல நூற்றாண்டுகளாக பேரூர் கோயில் இருந்து வருவதால், மூவரின் அஸ்தியை வைத்துள்ளார்கள். மகாத்மா காந்தியின் அஸ்தியை இங்கே வைத்துவிட்டுத் தான், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காந்தியின் மற்றொரு அஸ்தியை வைத்துள்ளார்கள்.. கோவை மாநகருக்கு கிடைத்த சிறப்பு அம்சங்களில், இந்த புனித இடமும் ஒன்றாக இருக்கிறது..!!
நடுவில் இருக்கும் மகாத்மா காந்தியின் அஸ்திக் கும்பம்..
கோவை மாநகரின் தவப்புதல்வர் ஒருவரான இவர் கோயிலுக்கு அருகாமையில் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்தார். நான் சாமி!! என்ன செய்கிறீகள் என்று கூப்பிட்டேன். என்னை யாரென்று திரும்பிப்பார்த்த போது தவப்புதல்வரை புகைப்படம் எடுத்தேன்..!!
நொய்யல் ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள படித்துறைகள்..
பேரூர் கோயில் முன்பு உள்ள தெப்பக்குளம்...
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள யானை...
No comments:
Post a Comment