சீர்காழி ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி @Aalayamselveer (ஆலயம் செல்வீர்) யூடியூப் சேனலில் உள்ள வீடியோ காணொளி. 2018ஆம் வருடம் பிப்ரவரி 12 திங்கள்கிழமை.. ஆலயம் செல்வீர் யூடியூப் சேனல் உதயமான நாளாக உள்ளதை பார்க்கிறோம்.
திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரத்தில் பாடல் பெற்ற பிரசித்தி பெட்ரா கோவிலாகும். இரண்டாம் திருமுறையில் பாடல் உள்ளது.
பண்: இந்தளம்.. சோழநாடு, காவிரி வடகரை..
"பூந்தராய்" பாடல்..
செந்நெ லங்கழ னிப்பழ
னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ
னம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி
தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை
பாம்புடன் வைத்ததே.
தேவாரத்தில் மொத்தம் பத்து பாடல்களுடன் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை என்று Shaivam.Org இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூடியூப் இணையத்தில் ஒரு வீடியோ காணொளியை பார்க்கும்போது நம்மிடம் எந்த மாதிரியான அனுபவங்கள், சிந்தனைகள் உருவாகிறது என்பதைச் சொல்வது ஒரு வகையான நாட்குறிப்புகளை போன்றது. தொலைகாட்சி சேனல்களை மிஞ்சும் அளவிற்கு யூடியூப் சேனல்களில் பதிவேற்றமாகும் வீடியோ காணொளிகள் உலகமெங்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோவிலைப் பற்றி திருநெல்வேலி ஜில்லாவில் வசிக்கும் என்னைப் போன்ற ஆன்மீக அன்பர்களுக்கு தெரியவரும் பட்சத்தில், அந்தக் கோவிலைப் பற்றி யூடியூபில் தேடிப் பார்க்கையில் ஒரு வகையான பரவசம் உருவாகிறது. ஒரு முப்பது சதவிகிதம் அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனை தரிசனம் செய்த அனுபவம் உருவாகுவது, இத்தகைய தொழில்நுட்பத்தின் பெரும் கொடையாக உள்ளது.
2024ஆம் வருடம், மார்ச் மாதம், திங்கள்கிழமை.. பதிவேற்றமான வீடியோ காணொளி என்பதை பார்க்கிறோம். மார்ச் மாதத்தின் கடைசி வாரம்போல சரியான முடிவினை எடுக்க முடியாத சூழல் நிலவியபோது, கோவை நகரின் அவிநாசி சாலையில் ஹோப்ஸ் பகுதியிலுள்ள ஆர்கஸ் நகரின் உள்ளே ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருக்கையில் சீர்காழி ஊரிலுள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய இந்த வீடியோ காணொளியை பார்த்த பின்பு காலமும், நேரமும் நல்ல முறையில் உறுதுணை புரிந்தது. பரமேஸ்வரனுடைய ஆன்மீகப் பேராற்றல் எத்தகைய உருவத்திலும் வந்து நம்மை ஆட்கொண்டு யானை பலமுடன் நம்முடனே இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் தருணமாக திங்கள்கிழமை மாலைபொழுது அமைந்தது.
எட்டு அஷ்ட பைரவர்களை கொண்ட சந்நிதி இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய தல வரலாற்றினை ரிஷி குருக்கள் அருமையாக பேசுகிறார்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நமசிவாய..