இயற்கை வளத்தோடு கூடிய பசுமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா உலகையே வெல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம். பாரதமே விழித்தெழு, உலகை ஒளியூட்டச் செய்..
Thursday, January 15, 2015
தை திருநாள் வாழ்த்துக்கள்!
Friday, January 2, 2015
மலைவாழ் பழங்குடிகள் - தோடர் இன மக்கள்
1913 ம் ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த
ஜே.சார்டஸ் மொலோனி அவர்கள், நீலகிரி மலைபிரதேசத்திற்கு சென்ற போது, தோடர் இன மக்களை புகைப்படம் எடுத்துள்ளார். 1925 ம் ஆண்டுகளில் எழுதிய "A Book Of South India" என்ற புத்தகத்தில் தோடர் இன மக்களைப் பற்றிய வாழ்வியல் முறைகளை பதிவு செய்துள்ளார். 1923 ம் ஆண்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். தன்னுடைய நாட்டிற்கு சென்றபிறகு தென்னிந்தியாவை பற்றிய அற்புதமான நூலை எழுதி வெளியிடுகிறார்.
பிரிட்டீஷ் ஆட்சி கால இந்தியாவில் எண்ணற்ற ஆங்கிலேய அதிகாரிகள் மலை வாழ் பழங்குடி மக்களைப் பற்றிய செய்திகளையும், வரலாறுகளையும் எழுதியுள்ளனர். இவர்களில் மொலோனி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.தோடர், படுகர், இருளர் என்று எண்ணற்ற மக்கள் நீலகிரி மலைத்தொடர்களில் வசிக்கி றார்கள். பழங்குடி மக்களின் வரலாறு நீண்ட நெடிய வருடங்கள் கொண்டது. ஆங்கிலேயர்கள் நீலகிரி மலைத்தொடர்களில் குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகே, பழங்குடி மக்கள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார்கள்.
1920 ம் ஆண்டுகள் வரைக்கும் கல்வியறிவு ஒரு சதவிகிதம்கூட இல்லாமல் இருந்தார்கள். அதன்பிறகு படிப்படியாக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக ளால், பள்ளிக்கூடங்களில் தங்களுடைய குழந்தைகளை படிப்பதற்கு அனுப்பி னார்கள். இன்றைய தினங்களில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அளவிற்கு கல்வியறிவு பெற்றவர்களாக ஆகியுள்ளனர்.
டாக்டர்.பிலோ இருதயநாத் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 35 வருடங்க -ளுக்கும் மேல், பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இவர் எழுதிய "கொங்கு மலைவாசிகள்" என்ற புத்தகம் சிறப்புக்குரியது. மேலும் பல நூல்களை எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் அவர்கள், மேற்குதொடர்ச்சி மலைகளின் பல்லுயிரியத்தைப் பற்றி பல வருடங்களாக நாளிதழ்களில் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய கட்டுரைகளை, 'இன்னும் பிறக்காத தலை முறைக்காக', தாமரை பூத்த தடாகம் என்று இரண்டு புத்தகங்களில் தொகுத்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல்களில் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்தி களையும் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)