Thursday, January 18, 2024

பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவில்.. கோவை..

பச்சைநாயகி அம்மன் உடனுறை பட்டீஸ்வரசுவாமி கோவில், கோவை நகரிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் பேரூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வலதுபுறமாக நொய்யல் ஆறு ஓடும் கால்வாய் அமைந்து மழை பெய்யும் காலங்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை பார்க்கலாம். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவை நகரில் சித்ரா விமான நிலையம் அருகிலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையிலுள்ள என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி படிக்கையில் 2005ம் வருடம் மார்ச் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை கொண்டப்பட்ட மஹாசிவராத்திரி விழா வைபவத்திற்கு பட்டீஸ்வரசுவாமி கோவிலுக்கு முதல் முறையாக விஜயமாகி தரிசனம் பெற்றது. பத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு இந்த 2024ஆம் வருடம் கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி விழா வைபவம், மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாளாக அமைந்து 2005ஆம் வருடத்துடன் நெருங்கிய தொப்புள் கொடி உறவாக அமைந்ததை கண்டு வியப்பாக இருந்தது. 


தேசமங்கையர்கரசி அவர்கள், பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலைப் பற்றிய தல வரலாற்றினை தன்னுடைய ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பல்வேறு விதமான அபூர்வமான விஷயங்களுடன் அருமையாக பேசுகிறார். @AthmaGnanaMaiyam யூடியூப் சேனல், சந்தனக் காட்டு சிறுத்தை என அழைக்கப்படும் வீரப்பனுடைய பிறந்த தினமாக 2015ம் வருடம் ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை அன்று உதயமானதை பார்க்கிறோம். ஆன்மீகப் பேச்சாளர்களில் கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற மனிதராக விளங்கிய கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவியாக அவருடைய பாடசாலையில் கற்றுத் தேர்ந்த தேசமங்கையர்கரசி அவர்கள், தமிழ் இலக்கியத்திலும், ஆன்மீகம் மற்றும் பக்தி இலக்கியத்திலும் மிகச் சிறப்பான புலமை ஞானத்துடன், கடுமையான பயிற்சியின் மூலம் சிறந்த பேச்சாளராக தமிழ்நாட்டின் ஆன்மீகப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க பெண்மணியாக, தமிழக அரசினுடைய கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.


2022ஆம் வருடம், ஜூலை 9 சனிக்கிழமை அன்று.. ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலைப் பற்றி தேசமங்கையர்கரசி பேசும் வீடியோ காணொளி பதிவேற்றம் ஆகியுள்ளது. 


பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலுக்கு உள்ளே விஜயமாகி பட்டீஸ்வரரின் சந்நிதிக்குச் செல்லும் முன்பு உள்ள மண்டபத்தின் மேல்விதானத்தில் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வருகை தந்து பட்டீஸ்வரரின் சுயம்பு லிங்கத்தின் மீது பாலினை சொரிந்து தினமும் தவத்தினை புரியும் விதமாக உள்ள தல வரலாற்றினை சொல்லும் விதமாக உள்ள பெரிய புகைப்பட கேலரியினை பக்தரான எஸ்.வி.சுப்பையா என்பவர்.. 1956ஆம் வருடம், டிசம்பர் 06 வியாழக்கிழமை அன்று கோவிலுக்கு அன்பளிப்பாக தந்த நிகழ்வு புகைப்படத்திலே எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment