Saturday, November 17, 2012

Friday Oct 5 th, 2012 (Global James Bond Day) -50 th Birthday - James Bond 007


At Wednesday night’s Britannia Awards in Los Angeles James Bond actor Daniel Craig received the Britannia Award for British Artist of the Year. The Britannia Awards are BAFTA Los Angeles’ highest accolade, a celebration of achievements honouring individuals and companies that have dedicated their careers to advancing the entertainment arts. 


Winners included Daniel Day-Lewis (Stanley Kubrick Britannia Award for Excellence in Film), Quentin Tarantino (John Schlesinger Britannia Award for Excellence in Directing), Trey Parker and Matt Stone (Charlie Chaplin Britannia Award for Excellence in Comedy) and video game designer Will Wright (SimCity) who was presented with the Albert R. Broccoli Britannia Award for Worldwide Contribution to Entertainment.Proceeds from the gala ceremony support BAFTA Los Angeles’ on-going education, scholarship, community outreach and archival projects.



 EON Productions, Metro-Goldwyn-Mayer Studios and Sony Pictures Entertainment are delighted to announce that SKYFALL has become the biggest film at the UK box office in 2012 surpassing The Dark Knight Rises with an extraordinary box office total of over £57m in just 12 days. It is now also the biggest Bond movie of all time in the UK exceeding the £55.6m achieved by CASINO ROYALE in 2006. 


This exclusive extract from the GOLDFINGER chapter of The James Bond Archives, published by TASCHEN, is an oral history written by Paul Duncan. 



 Friday, October 5th, 2012 will be Global James Bond Day, marking the 50th anniversary of the James Bond film franchise.



 Best Of Bond… James Bond, a new collection of digitally remastered music from the franchise’s history, will be released in two configurations on October 8th (October 9th in North America). Best Of Bond… James Bond features the memorable theme songs from all 22 official Bond films and and as a deluxe, “50 Years - 50 Tracks” double CD. Both will be available on CD and digitally. 





 Day five and the tour travelled from Nene Valley Railway, Peterborough to Stoke Park, Buckinghamshire, one of the key locations in GOLDFINGER.


Bond girl, Eunice Gayson, launched the official Bond Blu-ray Relay today at Eilean Donan Castle, situated on the edge of Loch Duich, Scotland. Eunice, who played Sylvia Trench in DR. NO and FROM RUSSIA WITH LOVE, arrived at 9am in the QUANTUM OF SOLACE Aston Martin DBS. The castle, home to the British Secret Service in THE WORLD IS NOT ENOUGH, played host to both loyal fans and the national press.


Friday, November 16, 2012

நேற்று கல்விக் கூடங்கள்; இன்று தங்கச் சுரங்கங்கள்...

முன்பெல்லாம் தங்கச் சுரங்கங்கள் என்றால் கோலார் தங்கச் சுரங்கத்தைதான் சொல்வார்கள்.காரணம் கோலார் தங்கச் சுரங்கத்திற்கும் தமிழர்களுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.இன்று கோலார் தங்கச் சுரங்கத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.காரணம்! சுரங்கத்தில் தங்கத்தின் இருப்பு குறைந்ததும், அதை தோண்டியெடுக்க செலவும் அதிகமானதால் 2003 ஆம் ஆண்டுடன் சுரங்கம் மூடப்பட்டது.அங்கிருந்த தமிழர்கள் குசேலர்கள் ஆனார்கள்.

இன்று தங்கச் சுரங்கங்கள் பூமிக்கடியில் இல்லை.பூமிக்கு மேலே பூத்துக் குழுங்குகின்றன.ஆம்! இன்று வணிக ரீதியாக வளமடைந்துள்ள கல்விகூடங்களைத்தான் சொல்கிறேன்.  இன்று, இரு மருத்துவக் கல்லூரிகளில் மிகப் பெரிய அளவில் நன்கொடை வசூல் நடப்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.  வெளிச்சத்திற்கு வந்திருக்கும் செய்தி மிகச் சிறியது.இதுபோன்று ஆயிரக்கணக்கான கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்களின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது என்பது தமிழகத்தில்  உள்ள  அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும், இதை யாருக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவர துணிவில்லை.அவர்களுக்குப் பழகிப் போனது!

பத்திரிகைச் செய்தி, ஒரு மத்திய இணை அமைச்சரின் கல்வி நிறுவனத்தை குற்றம் சாட்டுகிறது.இன்று எந்த அரசியல்வாதியின் பெயரில் கல்வி நிறுவனங்கள் இல்லாமல் இருக்கிறது?. ஒன்று கல்வி வள்ளல்கள் தங்கள் கல்வித்தொழிலை  பாதுகாத்துக்கொள்ள அரசியலுக்கு வருகிறார்கள் அல்லது அரசியல்வாதிகள் கல்வி வள்ளல்களாக மாறுகிறார்கள்.இதுதான் இன்றைய நடைமுறை.

கல்லூரியில் நன்கொடை வசூலிக்கிறார்களா? என அறிய, பெரிய விசாரணைக்கு ஒன்றும் போகத் தேவையில்லை.இன்று வங்கிகளுக்கு சென்று ஒவ்வொரு மாணவரும் வங்கிகளில் இருந்து பெற்றிருக்கும் கல்விக் கடன்களை பார்த்தாலே போதும்!

ஆனால் விசாரணை இப்படி நடக்காது!யாராவது புகார் கொடுத்தால் தான் விசாரிப்போம் என அடம்பிடிப்பார்கள்.இவ்வளவு பெரிய வசூல் அரசுக்கு தெரியாமலா நடக்கும்?

தனது குழந்தை  எல்.கே.ஜி-இல் சேர பணம் கொடுப்பதிலிருந்து, கல்லூரியில் படித்து முடிப்பது வரையிலும் தனது பெரும் பகுதி உழைப்பை பெற்றோர்கள் இதற்கே செலவு செய்யவேண்டிய கட்டாயம்.

கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கும் போது இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய பணம் செலவு செய்கிறார்கள்.இங்கே தான் பல நேரங்களில் முதல் தவறு நடக்கிறது.வருடா வருடம் நடக்கும் மறு ஆய்வுகளெல்லாம் வெறும் கண்துடைப்பு.அதை மறு வசூல் என்று கூட சொல்லலாம்?
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பொய்யான உறுதிமொழிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமலே வகுப்புகள், கண்ணாடி வெளிப்புறத்தை தவிர போதிய உபகரணங்கள் இல்லாத ஆய்வகங்கள்,நடிகர் நடிகைகளுக்கு டாக்டர் பட்டங்கள், நூறு சதவிகித வளாக வேலைவாய்ப்பு உறுதிகள், இன்னும் ஏன், பல கல்வி நிறுவனங்கள் கட்டிடப் பொறியாளர்கள் கொடுக்கும் வரைபடங்களை காட்டியே வசூலை துவக்கிவிடுகிறார்கள்.

பொதுவாக பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்துப் போவார்கள். அதற்க்கு அடுத்த இடம் தனியார் கல்லூரிகளுக்கு. ஆனால் தனியார் கல்லூரிகள், தங்கள் கல்லூரி  நூறு சதவிகித வளாக வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறுவார்கள். அரசுக் கல்லூரிகளில் வளாக வேலை வாய்ப்பை அவ்வளவாக பார்க்க முடியாது.எப்படி?  
அங்கே பணம் கொடுத்து, இங்கே பணம் கொடுத்து கடைசியில் தொழிற்கூட நிர்வாகிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளாக வேலை வாய்ப்புக்கு என்று கூட்டிவருகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது முழு ஏமாற்று வேலை.

பொறியியல் கல்லூரியில் சேர மூன்று முதல் ஐந்து இலட்ச ரூபாய் வசூலிக்கிறார்கள் ,மருத்துவக்கல்லூரிகளில் இருபது முதல் நாற்பது இலட்சம் வரை வசூலிக்கிறார்கள்,எம்.பி.ஏ படிப்புக்கு மூன்றரை முதல் எட்டு இலட்சம் வரை வசூலிக்கப்படுகிறது, ஆசிரியர் பயிற்ச்சி மற்றும் பி.எட் படிப்புகளுக்கு ஒன்று முதல் இரண்டு இலட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள்.  இப்படியே ஒவ்வொரு படிப்பிற்கும் உள்ள மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து பணம் வசூலிக்கப்படுகிறது.  இதெல்லாம் போக விடுதிச் செலவுகள்,மற்றும் இதர செலவுகள் வேறு.இதை விட கொடுமை பல கல்லூரிகளில் தேர்வுக்கட்டணமாக ஒரு தாளுக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.எதற்காக? கடவுளுக்கே வெளிச்சம்!

அரசுக் கல்லூரிகளில், மாணவர்களிடம், இது போன்ற வசூல்கள் பெரும்பாலும் நடப்பதில்லை.காரணம், கட்டணம் அரசால் நிர்மாணிக்கப்படுகிறது. ஆனால் அங்கே விரிவுரையாளர் முதல் துணைவேந்தர் பதவி வரை பணம் இல்லாமல் பதவிக்கு வர முடியாது.அரசு மற்றும் அரசு சார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர் பதவியில் சேர தற்போதைய மார்க்கெட் நிலவரம் பத்து முதல் பதினான்கு இலட்சம் வரை எனக் கூறப்படுகிறது.இதைக் கொடுப்பதற்கே பல பேர் போட்டியிடுவதால் முக்கியமான இடத்தில் பணத்தை கொடுத்தால் மட்டுமே பதவி கிடைப்பது உறுதியாம்.
இதற்க்கு அடுத்ததாக மார்க்கெட் உள்ளது துணைவேந்தர் பதவி தானாம்.இதற்க்கு இடைப்பட்ட இடங்கள் பதவி உயர்வின் மூலமாகவோ அல்லது டாக்டர் பட்டம் கட்டாயம் என்ற காரணம் இருப்பதாலோ போட்டி குறைவாக இருக்குமாம்.அதனால் மார்க்கெட் மதிப்பு சற்றே குறைவாம்!
இது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை கல்வி நிறுவனங்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக நமக்கு நிறைய கல்வி நிறுவனங்கள் தேவை தான்.காரணம் இன்னும் நமது நாட்டில் 35 சதவிகிதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.முதலாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரையிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இன்னும் சொல்லப்போனால் தேசிய அறிவுசார் கழகத்தின் மதிப்பீட்டின்படி உயர்கல்வித் துறையில் மாணவர்களின் எண்ணிக்கையை பதினைந்து சதவிகிதம் அதிகரிக்க நமக்கு இன்னும் 1500 பல்கலைக் கழகங்கள் தேவைப்படுமாம்.

கண்டிப்பாக அரசு மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது.தனியார்களை, அரசு ஊக்குவிக்கக் காரணம், கல்வி கற்கும் வாய்ப்புக்களை பரந்த அளவில் உருவாக்குவதும்,  மாணவர்களுக்கு தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே கல்வி கிடைக்கச் செய்வதற்கும் தான்.இப்போது பல இடங்களில் இருப்பிடத்திற்கு அருகிலேயே கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
இருந்தும் கையுக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையே தொடர்கிறது.காரணம்!தங்களால் தொட முடியாத உயரத்தில் கல்விக் கட்டணங்கள்.இதில் எங்கே தரமான கல்வியை கற்பது?

பள்ளி மாணவர்களுக்கு  தேவையான தரமான கல்வியை  தனியார் கல்வி நிறுவனங்கள் தான் கொடுக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்ததற்கு, பல அரசுப் பள்ளிக்கூடங்கள், அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம்.பாவம் இந்த வியாதி கிராமத்தானையும் தொற்றிக்கொண்டுவிட்டது.அவர்களும் ஏமாற்றங்களுக்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

தேவை!கல்வித்துறையில் மாற்றங்கள்.கல்வித்துறையில் உள்ள குறைகள் முழுமையாக களையப்பட வேண்டும். பல அரசு மற்றும் அரசு சார் கல்லூரிகள் இருந்தும், பல்வேறு வகையான படிப்புகள் இருந்தும், தனியார் கல்விக்கூடங்களையும், ஒரு சில படிப்புகளையும் மட்டும் உயர்வாக நினைத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே தள்ளிவிடுவது அவர்களின் நம்பிக்கையின்மையையே காட்டுகிறது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தை பற்றிய  நல்ல நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.அதுதான் அவர்களின் நீண்ட கால பயணத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும்.

முன்பு புரோட்டா கடையில் வேலை  பார்த்துக்கொண்டே தனது பள்ளிப் படிப்பை முடித்து, பின்பு பி.ஏ சமூகவியல் படித்த, ஒரு மாணவர் இன்று ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்!

Monday, November 5, 2012

சிறுவாணித் தண்ணீர்

சிறுவாணி என்றால் கோவைக்காரர் களுக்கு பெருமையாய் இருப்பது போலவே மற்ற மாவட்டத்துக் காரர்களுக்கு இந்த சொல்லை எழுதிப் படித்தாலே இனிக்கும். 28 ஆண்டுகளு க்கு முன்னாள் தமிழக அரசு கேரளாவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பண்ட மாற்று முறையில் நாம் மின்சாரம் தர, அதற்க்கு மாற்றாக அவர்கள் சிறுவாணித் தண்ணீரைத் தர, மாநகரெங்கும் அது விரிவாகக் கிடைக்க வழிசெய்யப்பட்டது என்பதுதான்
பலருக்கு தெரியும்.

ஆனால் அதற்கு முன் 40 ஆண்டு காலமாக 95,000 பேர் குடிக்கும் அளவுக்கு
சிறுவாணித் தண்ணீர் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது என்பதும்,அது இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்னரேயே வரையப்பட்ட திட்டம் என்பதும் அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த திட்டத்தை 1889 ஆம் ஆண்டு வரைந்து கொடுத்தவர் - இன்று கோவை மில் ரோட்டில் மரக்கடை வீதி பிரிவுக்கு முன்புறம் குளிர்ந்த மரங்களுக்கி டையே உள்ள மகளிர் உயர்நிலைப்பள்ளி யார் பெயரை தாங்கி உள்ளதோ...
அப்பெயருக்குரிய பெரிய மனிதர் சே.ப.நரசிம்மலு நாயுடு தான் அவர்.பெண்ணடிமைத்தனத்தை உடைக்க வங்காளத்தில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் எனும் சீர்திருத்தப் பெரியாரால் கவரப்பட்டு,நரசிம்மலநாயுடு
இப்பள்ளியை முதலில் பிரம்ம சமாஜம் பெண்கள் பாடசாலையாகவே நிறுவினார்.பக்கத்திலேயே ஓர் அச்சகம் அமைத்து கலாநிதி என்ற பத்திரிகையை நடத்தி ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களை பரப்பி வந்தார்.
பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் வாரக் கூட்டங்களை நடத்தினார்.
தென்னிந்திய சரிதம்,பலிஜவாறு புராணம்,தளவரலாறுகள்,ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்களைத் தமிழிலும்,தெலுங்கிலும் எழுதி வெளியிட்ட
இவர்,சிறந்த பேச்சாளரும் கூட.

இவரது திட்ட வரவை 33 ஆண்டுக் காலம் நகரசபை கண்டு கொள்ளவே இல்லை.சுலபமான,செலவு குறைந்த சில திட்டங்களையே ஆராய்ந்து வந்தார்கள்.ஆனால்,அக்காலத்தில் அசுர வேகத்தில் பரவி வந்த பிளேக் என்னும் விசக்காய்ச்சல் சுகாதரக் குடிநீரின் அவசியத்தை உணர்த்திய தால் 1922 - ல் இத்திட்டத்தை பரிசீலிக்கத் தொடங்கினார்கள். நேரடியாகவே இடத்துக்குச் சென்று சாத்தியக் கூறுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டே அதனை நுட்பத்தோடு தீட்டியிருந்த்தார் நரசிம்மலு நாயுடு.

சிறுவாணி என்பது கேரளாவில் முத்திக் குளம் என்னுமிடத்தில் உற்பத்தியாகி,
இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையே பல சிற்றோடைகளுடன் சேர்ந்து
வடக்கே 25 மைல் ஓடி,பவானியோடு கலக்கும் ஒரு சிற்றாறு.உயர்ந்த
மலைகளிலே பெய்யும் மழையினால் அந்த ஆறு எப்போதும் வற்றாமல் ஓடுகிறது.கோவைக்கு மேற்கே 21 மைலில் பொரத்தி அடிவாரத்திற்கு சென்று
அம்மலை ஏறி மறுபக்கம் இறங்கினால் சிறுவானியை அடையலாம்.

சிருவாணிக்குச் செல்லும் வழி மிக அழகாக இருக்கும்.சிருவாணியை வேறுபடித்தி நிற்கும் மலை பொரத்தி மலையாகும்.அதனைக் குடைந்து நீண்ட
துவாரம் ஆக்கி,அதன் வழியாய் வரும் சிருவாணிக்கு ஓர் அணையைக் கட்டி
வைத்து,தேக்கின் நீரை ஓடவிட்டால்,அந்நீர் மலைச் சரிவில் ஓடுகிற
ஆணையாற்றில் வந்து விழும்.அவ்வாற்று நீரைத் தொட்டிகளில் நிரப்பி,
குழாய் வழியக் 21 மைல் தொலைவிலுள்ள நகரத்திர்க்குக் கொண்டு வரச்
செய்தலே இந்த திட்டம் ஆகும்.அதன்படி மலையில் தோண்டப்பட்ட துவாரம்
ஒரு மைல் நீளம்.நீர் மிகச் சுத்தமானது.ஆணை அப்போது 23 அடி உயரம். குழாய் 18 அங்குலம் குறுக்களவு.

திட்டம் நிறைவடையும்போது ஏற்பட்டிருந்த செலவு ரூ.48 லட்சம்.நகருக்கு
வந்து சேர 1928  ம் ஆண்டுக்குள் 30 மைல் தூரத்திற்கு குழாய் போடப்பட்டது. 1929 ம் ஆண்டு மலையில் 390 அடி நீள துவாரம் தோண்டியிருந்த போது வேலை தடைபட்டு நின்றிருந்தது.பிறகு ஒரு வங்காளி அவ்வேலையை
முடித்துத் தர ஒப்பந்தம் செய்து ஓராண்டிற்குள் விரைவாக முடித்துத் தந்தார்.
இதற்கிடையில் 1929 - ல் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியதால்,கோவை மக்கள் பெரும் கிளர்ச்சிகளில் இறங்கினார்கள்.ஆணையாறு எனும் ஆற்று
நீரை எடுத்துக் கொள்ள அனுமபதிப்பதற்க்கு சென்னை அரசாங்கம் அதிக
அவகாசம் எடுத்துக் கொண்டதே தாமதத்திர்க்குக் காரணம்.உடனே
ரத்தினசபாபதி முதலியார் அரசாங்கத்தை அணுகி விரைவாக அனுமதி
பெற்றதும்,நீர் கொண்டு வரப்பட்டது.

முதன் முதலாய் சிறுவாணித் தண்ணீரை குழாய் வழியாகச் சுவைத்த மக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு தொட்டி ஊருக்கு வடக்கே வனக்கல்லூரியை அடுத்த மேட்டில் கட்டப்பட்டது.அதன் உயரம்
கடல் மட்டத்திலிருந்து 1450 அடி.நகரின் மற்ற பகுதிகள் இதைவிடத் தாழ்வானவை.ஆகவே,நீர் சிரமமின்றிப் பாய்கிறது.அத்தொட்டிக்கருகே
அப்போது அன்றைய கவர்னரின் பெயரில் உண்டாக்கப்பட்டதே கோஷன்
பூங்கா-இப்போது பாரதி பூங்கா.இத்திட்டம் நிறைவேற பெருந்துணை செய்தவர் புலியகுளம் ஜமோதார் சின்னமருதாச்சலப் பண்ணாடி என்றொரு குறிப்பு உண்டு.புளியகுளத்தில் இன்னும் சின்னமருதாசலம் பெயரில் ஓர்
வீதியும் உண்டு.