Friday, August 2, 2013

உறுதியான மனம்!

கென்யாவில் கிமானி மருகே என்னும் பெயரைக் கொண்ட
90 வயது தாத்தாவைத் தெரியாத ஆளே இல்லை...
என்று கூறிவிடலாம்.அந்த அளவிற்கு புகழ்பெற்றவர்.

கல்வி கற்க வேண்டுமென்ற தீராத வேட்கை கொண்ட
இவரின் படிப்பு ஆசைக்கு குடும்ப வறுமை
தடைக் கல்லாக நின்று விட்டது.
2003 ம் ஆண்டு அந்நாட்டு அரசு ஆரம்பக் கல்வியை
இலவசமாக்கியது.

இது தான் வாய்ப்பு என்று கருதிய தாத்தா
பேனா,புத்தகத்துடன் பள்ளிக்கு நடையைக் கட்டிவிட்டார்.
அப்போது அவருக்கு வயது 84.

உலகிலேயே மிக வயதான மாணவர் என்று
இவரை ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
(தினமணி,மதுரை - 30.08.2009)

ராய்ட்டர் நிறுவனம்,ஏன் இந்த வயதில் புத்தகம்-நோட்டெல்லாம் ..?
என்று தொடுத்த கேள்விக்கு
தாத்தா இப்படி பதில் சொல்கிறார்!

பைபிளை நானாகப் படித்துப் பார்க்க வேண்டும்
என ஆசை எனக்கு இருந்தது.அதுதான் ஸ்கூலில்
சேர்ந்திருக்கிறேன் என்கிறார் உறுதியோடு!!

பெருமை தேடித்தந்த உறுதி!

ஐயோ..எரியுதே..காப்பாற்றுங்களேன்!"
இப்படி கதறலோடு முடிந்துபோன விபத்தில் கருகிப்போன 
பெற்றோரின் மகள் அபிராமி.

சின்னஞ் சிறிய குழந்தையை இப்படி அனாதையாக 
நிறுத்திட்டேயே ஆண்டவா..!என இரக்கம் சொட்டப் 
பார்த்த பார்வைகளுக்கு மத்தியில்...

சிவசாமி - பிரியா எனும் அபிராமியின் மாமா - அத்தை 
வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

என்னைக் கைவிட்டுவிடாமல் - தவிக்க விடாமல் 
வளர்த்து வரும் அத்தை மாமாவுக்கு பெருமை தேடித் 
தருவேன் என்று உறுதி எடுத்தார் அபிராமி.
அதை நிறைவேற்றியும் விட்டால் அபிராமி!

சென்னை விருகம்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா 
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான அபிராமி 
10 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
488/500 (மகளிர் முரசு,ஜூன் 2010)

அபிராமியை அவரது தோழிகள் குறிப்பிடுகிறார்களாம் 
நம்பிக்கைத் தூண் என்று!!