கடந்த 2022ம் வருடம்.. அக்டோபர் 25, செவ்வாய்கிழமை. மாலையில் சூரிய கிரஹனம் தமிழ்நாட்டில் தெரியும் என்று வானிலை மண்டல இயக்குநர் அலுவலகம் டிவியில் சொன்னதை, இணையமான டுவிட்டரில் கண்டது. கரிவலம்வந்தநல்லூர் செல்லும் சாலையில் அமைந்த நடுவப்பட்டி ஊருக்கு மதியம் 12 மணிபோல டூவீலரில் சென்றது. எனது குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து வடக்கு திசையில் நான்கு கிலோ மீட்டர். நண்பரை பார்த்து சந்தித்து பேசிவிட்டு எங்கு செல்லலாம் என எண்ணியபோது.. பள்ளி வகுப்பு நண்பனை காண விஜயாபுரி செல்லலாம் என கிளம்பியது. கோவில்பட்டி நகரிலிருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் பயணித்து தெற்கு திட்டங்குளம் ஊரினை கடந்து வலது புறமாக திரும்பி ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்தால் விஜயாபுரி ஊரினை அடையலாம். இப்படியாக, பயணம் செய்து வந்தது.
மாலை வேளை.. சூரிய கிரஹணம் நடைபெறும் என்பதால் ஸ்ரீவெங்கடாசல பெருமாள் கோவிலின் நடை சாத்தப்பட்டு பூட்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களின் நடை பூட்டியிருப்பதை டுவிட்டர் செய்தியில் கண்டது. மாலை 05:30 மணி. ஊருக்குள் நுழையும்போது குருமலை அடிவாரத்தின் கீழே சூரிய கிரஹணம் தெளிவாக தெரிந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலின் பின்புறம் சாலையில் அமைந்த விஜயாபுரி காம்ப்ளக்ஸில் அமைந்த செண்பகா நூலகத்தில் மார்ச் 04 அன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதிய "கர்ணனின் கதை" நாவலின் மூன்றாம் பதிப்பு நூலினை ரூபாய் 65க்கு வாங்கியதை.. மனதில் நினைவாக சுழன்றபோது, பாலகுமாரன் அவர்களை எழுத்துச் சித்தர் என கோடான கோடி வாசகர்கள் அழைக்கிறார்கள் என்பதை எண்ணி பிரமிப்பூட்டியது.
2022, மார்ச் 4 - வெள்ளிக்கிழமை.. திதி பிரகாரம் ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களின் பிறந்த தினம்.. சுவாமி விவேகானந்தர் அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய குரு எனச் சொல்வார்கள்.
மூன்றாம் பாதிப்பு - 2011, பிப்ரவரி.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு நினைவு ஆண்டில் வெளியான மூன்றாம் பாதிப்பு நாவல் என்பதை மார்ச் 4 அன்று செண்பகா நூலகத்தில் வாங்கும்போது நண்பரிடம் சொன்னேன். 2017ம் ஆண்டு கர்ணனின் கதை நூலினை கண்டேன். பின்பு ஒரு வாரம் கழித்து நூலை வாங்கலாம் என வந்தபோது வாசகர் ஒருவர் இரவலாக எடுத்துச் சென்றதை அறிய.. இன்று இந்த நூலை கண்டு மிகவும் பாக்கியமாக அமைந்ததை சொன்னேன்.
No comments:
Post a Comment