Tuesday, October 29, 2024

காரமடை அரங்கநாதர் கோவில்..

கொங்கு மண்டலத்தில் கோவை நகரிலிருந்து உதகைமண்டலம் செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் ஊருக்கு முன்பாக ஏழு கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர், காரமடை நகராட்சி. முதல் பஸ் நிறுத்தம் இறங்கி ஒரு கிமீ தொலைவு நடந்தால் அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்யலாம். திருமாலை வழிபடும் வைணவ கோவில்களில் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமானுஜர் திருத்தல யாத்திரை செய்தபோது இங்குள்ள காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்து சுயம்பு மூர்த்தியாக உருவாகி அருள்பாலிக்கும் அரங்கநாதரை வழிபாடு செய்த பேறு பெற்றமையால் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுவதாக அரங்கநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் சொன்னார். பெருமாளுடைய பிற கோவில்களில் உள்ள மூலவராக இல்லாமல், சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்புரிவது, இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும். 

அரங்கநாயகி தாயாரின் சந்நிதியை பார்க்கையில் ஆன்மீகப் பேராற்றுலடன் விளங்கியது. இராமயாணம் இதிகாசத்தில் பத்து தல ராவணனுடன், ஸ்ரீராமபிரான் போர் செய்யும் காட்சிகள் சந்நிதிக்கு முன்பு உள்ள தூண்களில் சிற்பமாக இருந்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது.


அஞ்சனையின் மகன் ஹனுமானுடைய புஜத்தில் அமர்ந்து கொண்டு பத்து தல ராவணனை நோக்கி பிரம்மாஸ்த்திரம் எய்து போர் செய்யும் ஸ்ரீராமபிரானுடைய சிற்பம். ஸ்ரீமந் நாராயணின் பக்தனாக அரங்கநாதரின் கோவிலுக்கு விஜயம் செய்த நாள்.. 2024ம் வருடம், அக்டோபர் 28, திங்கள்கிழமை...

ஸ்ரீராமஜெயம்.. ஜெய் ஹனுமான்..  


செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது அரங்கநாதர் கோவிலுக்கு நடத்திய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..  
தினம்: 2015ம் வருடம், ஜூன் 07.. ஞாயிற்றுக்கிழமை.. 

ஸ்ரீராமபிரானுடைய பிரம்மாஸ்த்திரத்தை மார்பில் வாங்கி தன்னுடைய உயிரை துறக்கும் பத்து தல ராவணனின் சிற்பம்.. அரங்கநாயகி தாயாரின் சந்நிதியில் ஸ்ரீமுருகபெருமானுக்கு வழங்கும் வீரவேலினை போல ராமயாணம் போர் காட்சிகளின் சிற்பங்களை பார்க்கும் நம்மை பிரமிக்க வைத்தது.

No comments:

Post a Comment