Saturday, November 2, 2024

உலகளந்த பெருமாள் கோவில்.. காஞ்சிபுரம்..

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நீலிமா இசை.. காஞ்சிபுரம் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விஜயமாகி அங்கு இறைவனுக்கு அர்ச்சகர்களாக பணி செய்யும் அனுபவம் வாய்ந்த பெரிய மனிதர்களை நேர்காணல் செய்து கோவில்களை பற்றிய அத்தனை விஷயங்களையும் பேச வைத்து தன்னுடைய பங்களிப்பாக மேலும் பல ஆன்மீக விஷயங்களை பேசுகிறார். 

சுதந்திரப் போராட்ட வீரன் பகத்சிங்கின் பிறந்த நாளன்று @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி..

ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களில் "வாமன அவதாரம்" செய்த உலகளந்த பெருமாள் கோவிலை பற்றி @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை,,


யூடியூப்(YouTube) வீடியோ காணொளியிலிருந்து மொபைல் மூலமாக ஸ்நாப் ஷாட் எனும் புகைப்படங்களை உருவாக்க முடியும். மொபைலின் உள்ளே ஓடும் காணொளியை புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் இது ஒன்று. இத்தகைய ஸ்நாப் ஷாட் புகைப்படங்களின் மூலமாக வீடியோ காணொளியை பற்றி மேலும் பல விசயங்களை நாம் சொல்ல முடியும். வலைப்பூ வாசகர்களிடமும் எளிதாக கவனம் பெற்றுவிடும் சாத்தியம் உண்டு.

பெருமாளுக்கு பூஜை செய்விக்கும் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை. ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்த பாடலுடன் அர்ச்சகரே கோவிலின் சிறப்பை பற்றி பேசுவது, இந்த வீடியோ காணொளியின் சிறப்பு அம்சமாகும்.


கற்களில் செதுக்கப்படாத மூலிகைகள், தாவரங்களின் மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகளந்த பெருமாளின் சுதை சிற்பத்திலான மூலவருடைய தரிசனக் காட்சி. வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள் எனவும் சொல்லலாம்.

நூற்றி எட்டு(108) வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் ஐம்பதாவது திவ்விய தேசமாக போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.


கோவிலினுடைய வெளிப்பிரகாரத்தில் வழிபாட்டு முறைகளைப் பற்றி அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை.


நாதஸ்வரம் இசைக்கும் கோவிலின் கலைக் குழுவைச் சேர்ந்த சங்கீத சிரோன்மணி.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படும் கோதை நாச்சியார் ஸ்ரீஆண்டாள் தனது அப்பா பெரியாழ்வாருடன் ஒரே சந்நிதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


அர்ச்சகருடன் உரையாடிய பிறகு கோவிலைப் பற்றிய சுருக்கமான தகவலை பேசும் நீலிமா இசை.


வயர்லெஸ் மைக்ரோபோன் உதவியுடன் இரைச்சல் இல்லாத ஒலியுடன் ஒளிப்பதிவு செய்த உலகளந்த பெருமாள் கோவிலைப் பற்றிய வீடியோ காணொளியை பார்க்கும் நமக்கு அறுபது சதவிகிதம் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்த மகிழ்ச்சியை பெற முடியும் என்பது நூறு சதவிகித நம்பிக்கை எனச் சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணா..


ஓம் நமோ நாராயணா..

No comments:

Post a Comment