Wednesday, November 27, 2024

ஸ்ரீகோடி சுவாமிகள்.. புரவிபாளையம் ஜமீன்..

கோடி சுவாமி புரவிபாளையம் எனும் @KodiswamyPuravipalayam யூடியூப் சேனலில் ஸ்ரீகோடி சுவாமிகளைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அற்புதமாக சொல்லப்பட்டிருந்தது. 2023ம் வருடம், அக்டோபர் 7 தினமாக உதயமான யூடியூப் சேனல். கடந்த வருடம் அக்டோபர் 11 நாளன்று பதிவேற்றமாகி இருந்தது. 


கோவை நகரிலுள்ள பந்தய சாலையில் நெய்க்காரபட்டி ஜமீன் குடும்பத்தில் வசித்து வந்த கோடி சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் கோவை நகரின் பந்தய சாலையிலுள்ள ஒரு கோவிலுக்கு வந்தபோது இவர்கள் வந்த காரினுள்ளே ஏறி அமர்ந்திருக்கிறார். பூட்டியிருந்த காருக்குள் ஒரு சாமியார் எப்படி உள்ளே சென்றார்..? என புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்த வேளை, காரை ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என உத்தரவாக பேசியுள்ளார். 1962ம் வருடம், ஜூலை 2 திங்கள்கிழமை.. பொள்ளாச்சி மாவட்டம், பொள்ளாச்சி ஊரிலிருந்து பதினைந்து கி.மீ தொலைவில் அமைந்த புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் வசிக்கும் பங்களா வீட்டிற்கு ஸ்ரீகோடி சுவாமிகள் குடியேறிய நிகழ்வினை ஜமீன் குடும்பத்தினர் வைத்துள்ள ஆவணக் குறிப்பில் கண்டு வியந்தது.
 


அறுபத்து மூன்று நாயன்மார்களில் புகழ்பெற்ற ஒருவராக போற்றப்படும் கண்ணப்ப நாயனாரின் வம்சாவழி தோன்றலாக வாழ்ந்து வருபவர்கள் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் என்பதை கோடி சுவாமியை பற்றிய யூடியூப் வீடியோ காணொளியில்.. இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து செயல்படும் கொங்குநாடு கலாச்சார மையத்திலிருந்து கொடுக்கப்பட்ட சான்றிதழ் மூலமாக சொல்லப்பட்டிருந்தது. 


கோடி சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்களில் ஒருவர் இனிப்பு முட்டாயினை சுவைத்துக் கொடுப்பதை அன்புடன் பெற்றுக் கொள்கிறார். 


கோடி சுவாமிகளிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள்.


புறநானுற்று போர் வீரன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமாக கோடி சுவாமிகளின் ஜீவசமாதி கோவிலுக்கு விஜயமாகி தரிசனம் பெற்றது. புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் வசிக்கும் பங்களா வீட்டின் நுழைவாயிலில் ராஜகணபதி கோவிலுக்கு பின்புறமாக உள்ள பங்காள மாளிகையில் கோடி சுவாமிகள் முப்பத்தி இரண்டு வருடங்கள் குடியிருந்து ஜீவசமாதி அடைந்த நிகழ்வினை KodiSwamigal.com இணையத்தில், ஜமீன் வாரிசு பிரியாதேவி எழுதியுள்ள மலரும் நினைவுகள் குறிப்புகளின் மூலமாக அறிய முடிந்தது. கோடி சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த நாள்.. 1994ம் வருடம், அக்டோபர் 11.. செவ்வாய்கிழமை.

No comments:

Post a Comment