இந்திய நாட்டில் பரமேஸ்வரன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கமாக தரிசனம் தரும் கோவில்களில் ஒன்றான மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு நீலிமா இசை தன்னுடைய குழந்தைகள், கணவருடன் விஜயமாகி தனது ஆன்மீக அனுபவங்களை பேசும் யூடியூப் காணொளி. வரர்
கடந்த வருடம் பிப்ரவரி 4 சனிக்கிழமை நாளன்று.. நீலிமா இசையின் @Neels யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி. கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் எனும் சிறப்பினை உடையது. பிரம்மகிரி, நீலகிரி, கமலகிரி எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் திரியம்பகேஸ்வர் கோவில் அமைந்துள்ளதை நீலிமா இசை சொல்கிறார்.
திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு உள்ளே அமிர்தவர்ஷினி குளம் எனும் தீர்த்தத்திற்குச் சென்று ஐந்து முகங்களை உடைய பரமேஸ்வரனை தரிசனம் செய்து பேசும் வேளை. கும்பமேளா தொடங்குவதற்கான முதல் நாளின் கொடி கட்டப்பட்ட தினமாக விஜயம் செய்த வைபவமாக, அடுத்த பத்து நாட்களுக்கு கோவிலுக்கு உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதை நீலிமா இசை சொல்கிறார்.
நீலிமா இசையின் சேனலில் பதிவு செய்துள்ள இந்த காணொளியில்.. நல்ல இசையமைப்பு, நேர்த்தியான படத் தொகுப்பு, ஒவ்வொரு இடங்களில் தரிசனம் செய்த சந்நிதிகளைப் பற்றி பேசும் விதம் பத்து நிமிடங்களில் அமையப்பெற்ற விதம் இதனுடைய சிறப்பு அம்சமாக உள்ளது.
தன்னுடைய செல்லக் குழந்தையுடன் கோவிலின் வெளிச்சுற்று பிரகாரம் வெளியே நடந்து வரும் வேளையில்.
திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்த பின்பு ஆன்மீக அனுபவங்களை பேசும் வேளை.
கோவிலுக்கு உள்ளே அபிஷேகம் செய்த பின்பு லிங்கத்தினை தரிசனம் செய்யும் காட்சியின் அற்புதம்.
அனந்த பத்மநாபன் எனும் பெருமாளுடைய சந்நிதியில் தன்னுடைய செல்லக் குழந்தையுடன் தரிசனம் செய்யும் வேளை.
கோவிலுக்கு வெளியே திரியம்பகேஸ்வரரின் பிரசித்தி பெற்ற நெற்றித் திலகத்தினை தனது குழந்தைகளுடன் பெற்றுக் கொள்ளும் நீலிமா இசை..
திரியம்பகேஸ்வரர் கோவிலினுடைய உட்புறத்தில் நாம் பார்க்கும் அமிர்தவர்ஷினி குளத்தினுடைய பிரமிப்பான காட்சி.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நமசிவாய..
No comments:
Post a Comment