Saturday, December 13, 2014

முகநூல் பதிவு - 3

ஹாலிவுட் இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்துள்ள "எக்சோடஸ்" திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹீப்ரு மக்களின் விடுதலை நாயகனாக "மோஸே" வின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. "டென் கமாண்ட்ஸ்மெண்ட்ஸ்" திரைக் காவியத்தின் மறு உருவாக்கம்தான் எக்சோடஸ். டென்கமாண்ட்ஸ்மெண்ட்ஸில் மோசே ஒரு மென்மையான மனிதராக காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் தலைகீழாக மோசேவின் வீரம்! வரலாற்றில் புராண காவியங்கள் மனிதர்களிடம் ஏற்படுத்தும் ஈர்ப்பு அலாதியானது.இந்தப் படத்தில் ரிட்லி ஸ்காட் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். "கிளாடியேட்டர்" என்ற மகத்தான திரைக்காவியத்தை உலகிற்கு அளித்தவர் அல்லவா! அவ்வளவு எளிதில் சோடை போவாரா. இலக்கியத்தை, வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பார்க்கும் வகையில் பைபிளின் காவியத்தை படைத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்..!

வலைப்பூ வாசகர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!!

என்னுடைய வலைப்பூ தொகுப்பு முழுவதையும் பார்வையிட்ட (10,00,000) 
பத்து லட்சம் வாசகப் பெருமக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...! வலைப்பூ வாசகர்களாகிய உங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளித்திட அன்புடன் வேண்டு கிறேன்...!

ரா.செந்தில்குமார்...



வலைப்பூ தொகுப்பு : Click Here


twitter.com/Senthilkrisnan

Senthilkumarvision@yahoo.com

Worked at Ph.D Research Scholar
Lived in Coimbatore, 
Tamilnadu - India
36 followers/10,00,000Views

Monday, December 8, 2014

கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள சுசீந்திரம் கோயிலுக்கு சென்றபோது - 25.04.14

கன்னியாகுமரிக்கு செல்லும் வழியிலுள்ள சுசீந்திரம் கோயில் உலகப் புகழ் பெற்றது. இலங்காபுரி அரசன் ராவணனின் சகோதரன் விபீசணன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவின் சிவலாய வழிபாட்டு  தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறு வயதில் கிராமத்திலிருந்து சுற்றுலா சென்றபோது பலமுறை வந்ததுண்டு. அன்று போல் இன்றும் தன்னுடைய ஆன்மீகத் தன்மை குறையாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 

இந்தக் கோயிலுனுள் தாணுமலையான் சுவாமி அருள் புரிகிறார். இந்தக் கோயிலுள்ள அனுமன் சிலை 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க கோவையிலிரு ந்து கிராமத்திற்கு வந்தபோது, சுசீந்திரம் கோயிலுக்கு வழிபட வந்தேன். 




கோயிலுக்கு பக்கத்தில் உள்ள தெப்பக்குளம்..

















நான் தெப்பக்குளத்தில் அமர்ந்திருந்தபோது வெப்பமாக இருந்ததால், தண்ணீரில் வெப்பத்தைக் குறைக்க ஒரு அழகான நாய் வந்தது. பத்து நிமிடம் என் அருகிலேயே இருந்தது. அந்நிய ஆள் என்று நினைக்காமல் அன்போடு பழகியது, என்னை வியக்க வைத்தது.


கோயிலுக்கு அருகே பிச்சை எடுக்கும் முதியவர். இந்தியாவின் குடிமக்களில் இவரும் ஒரு அங்கம். இந்த பகுதியில் செல்வந்தராக இருந்தவர் என்று சிலர் சொன்னார்கள். ஒரு விபத்தில் குடும்பத்தை பறிகொடுத்த பிறகு மனநோயாளி ஆகி, இந்த அவல நிலைக்கு வந்ததாக அங்கெ இருந்தவர்கள் சொன்னார்கள்.

காலம்தான் மனிதர்களை எந்த அளவுக்கு தலையெழுத்தை மாற்றுகிறது. இதைத்தான் காலமிட்ட கோலம் என்கிறார்கள்..!


கோயிலின் தேர்..!




தெப்பக்குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழி. சிறு வயதில் என்னுடைய தந்தையாருடன் பலமுறை இந்தக் குளத்தில் நீராடி இருக்கிறேன். இன்றைய தினம் நீராடியபோது, தந்தையாருடன் குளித்த அனுபவம் பசுமையாக நினைவுக்கு வந்தது.