Thursday, December 4, 2014

மெட்ராஸ்

சமீபத்தில் கார்த்தி நடித்த "மெட்ராஸ்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் 'ரஞ்சித்' அவர்கள், இந்த திரைப்படத்தின் மூலம் முத்திரையை பதித்துள்ளார். "அட்டகத்தி" படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். "அட்டகத்தி"யில் மொக்கையான கதாபாத்திரத்தில் தினேஷை நடிக்க வைத்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.


"மெட்ராஸ்" அற்புதமான அரசியல் களத்தை மையமாகக் கொண்ட படம். வட சென்னையில் நடைபெறும் ரத்தமும், சதையுமான அரசியலை உணர்வுப்பூர்வ -மாக, தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார். இயக்குநர் ரஞ்சித் 'ஓவியக் கல்லூரி' மாணவர். இவருடன் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த தோழியையே திருமணம் செய்து கொண்டவர். இதனாலேயே இப்படத்தில் ஓவியத் திறமை மிளிர்கிறது. வட சென்னை குடியிருப்பு பகுதியிலுள்ள சுவர்களில், அரசியல்வாதிகளின் ஓவியமாக வரையப்பட்ட படங்களை யார்? வைக்க வேண்டும் என்பதில், இரு பிரிவினரிடையே மோதல் வெடிக்கிறது.

இளம் வயது அரசியல்வாதிகளுக்கிடையே நடைபெறும் மோதலில், பயங்கர வன்முறைகள் ஏற்படுகிறது. உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கிறது. இதற்கி டையே அறிமுகக் கதாநாயகி "கேத்ரீனா தெரசா அலெக்ஸாண்டர்", கார்த்தி யுடனான காதலில் அற்புதமாக நடித்துள்ளார். இயல்பான காதல் காட்சிகள் மனதை வருடுகின்றது.

ஒரு சுவரை வைத்துக்கொண்டு அரசியல் களத்தை படமாக எடுத்துள்ளது, பிரமிக்க வைக்கிறது. வட சென்னை பகுதி இளைஞர்கள், அரசியல்வாதிகளின்  சுயநலமான விசயங்களுக்கு, தங்களை அறியாமலேயே எப்படி? பலியாகிறார்கள், பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு அப்பாவி இளைஞர்கள் வாழ்வையே தொலைக்கும் அவலத்தை, இயக்குநர் அற்புதமாக திரைக்கதை அமைத்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் மெட்ராஸ் திரைப்படத்திகு "சிறந்த சமூக மாற்றத்திற்கான விருதை" வழங்கியது சிறப்பம்சமாகும்..!

No comments:

Post a Comment