Wednesday, November 27, 2024

ஸ்ரீகோடி சுவாமிகள்.. புரவிபாளையம் ஜமீன்..

கோடி சுவாமி புரவிபாளையம் எனும் @KodiswamyPuravipalayam யூடியூப் சேனலில் ஸ்ரீகோடி சுவாமிகளைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அற்புதமாக சொல்லப்பட்டிருந்தது. 2023ம் வருடம், அக்டோபர் 7 தினமாக உதயமான யூடியூப் சேனல். கடந்த வருடம் அக்டோபர் 11 நாளன்று பதிவேற்றமாகி இருந்தது. 


கோவை நகரிலுள்ள பந்தய சாலையில் நெய்க்காரபட்டி ஜமீன் குடும்பத்தில் வசித்து வந்த கோடி சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் கோவை நகரின் பந்தய சாலையிலுள்ள ஒரு கோவிலுக்கு வந்தபோது இவர்கள் வந்த காரினுள்ளே ஏறி அமர்ந்திருக்கிறார். பூட்டியிருந்த காருக்குள் ஒரு சாமியார் எப்படி உள்ளே சென்றார்..? என புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்த வேளை, காரை ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என உத்தரவாக பேசியுள்ளார். 1962ம் வருடம், ஜூலை 2 திங்கள்கிழமை.. பொள்ளாச்சி மாவட்டம், பொள்ளாச்சி ஊரிலிருந்து பதினைந்து கி.மீ தொலைவில் அமைந்த புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் வசிக்கும் பங்களா வீட்டிற்கு ஸ்ரீகோடி சுவாமிகள் குடியேறிய நிகழ்வினை ஜமீன் குடும்பத்தினர் வைத்துள்ள ஆவணக் குறிப்பில் கண்டு வியந்தது.
 


அறுபத்து மூன்று நாயன்மார்களில் புகழ்பெற்ற ஒருவராக போற்றப்படும் கண்ணப்ப நாயனாரின் வம்சாவழி தோன்றலாக வாழ்ந்து வருபவர்கள் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் என்பதை கோடி சுவாமியை பற்றிய யூடியூப் வீடியோ காணொளியில்.. இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து செயல்படும் கொங்குநாடு கலாச்சார மையத்திலிருந்து கொடுக்கப்பட்ட சான்றிதழ் மூலமாக சொல்லப்பட்டிருந்தது. 


கோடி சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்களில் ஒருவர் இனிப்பு முட்டாயினை சுவைத்துக் கொடுப்பதை அன்புடன் பெற்றுக் கொள்கிறார். 


கோடி சுவாமிகளிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள்.


புறநானுற்று போர் வீரன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமாக கோடி சுவாமிகளின் ஜீவசமாதி கோவிலுக்கு விஜயமாகி தரிசனம் பெற்றது. புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் வசிக்கும் பங்களா வீட்டின் நுழைவாயிலில் ராஜகணபதி கோவிலுக்கு பின்புறமாக உள்ள பங்காள மாளிகையில் கோடி சுவாமிகள் முப்பத்தி இரண்டு வருடங்கள் குடியிருந்து ஜீவசமாதி அடைந்த நிகழ்வினை KodiSwamigal.com இணையத்தில், ஜமீன் வாரிசு பிரியாதேவி எழுதியுள்ள மலரும் நினைவுகள் குறிப்புகளின் மூலமாக அறிய முடிந்தது. கோடி சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த நாள்.. 1994ம் வருடம், அக்டோபர் 11.. செவ்வாய்கிழமை.

Sunday, November 17, 2024

பழநி மலை முருகனின் தரிசனம்..

நீண்ட வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊரில் மலைமீது கோவில் கொண்டு அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய கடந்த வருடம்(2023) ஜனவரி மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று சென்றபோது, மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தரின் ஆசிரமத்தில் புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதியை தரிசனம் செய்தது. மலைமீது ஏறுகையில் அலைபேசி கொண்டு செல்வதற்கு தடை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த 2024ம் வருடத்திலிருந்து அலைபேசி கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை அறிகிறோம். மலைமீது உள்ள படிக்கட்டு வழியாக நடந்து செல்லும்போது மத்தியில் இடும்பன் சுவாமியை தரிசனம் செய்தது. பழநி முருகனை தரிசனம் செய்து பத்து வருடங்கள் ஆகியிருந்த ஞாபகம் வந்தது. இப்போதைய காலகட்டத்தில் ஆன்மீகம் ரத்தமும், சதையுமாக உயிருடன் கலந்துவிட்டதால் பரமேஸ்வரன், மஹாவிஷ்ணு, முருகபெருமான், பிள்ளையார் இன்னும் பிற தெய்வங்களை தரிசிப்பது ஐம்பூதங்களின் அனுகிரஹத்தால் காலமும், நேரமும் அமைந்து எளிமையாக உள்ளது. மலைமீது உள்ள படிக்கட்டுகளில் நடந்து சென்று கோவிலை அடைந்து பத்து ரூபாய் டோக்கன் வாங்கி பதினைந்து நிமிடத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கையில் பரவசமான அனுபவத்தை உணர்ந்தது.

தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த பின்பு அருகிலுள்ள சந்நிதியில் போகர் சித்தருடைய ஜீவசமாதியில் போகர் வழிபாடு செய்த மரகத லிங்கமுடன், புவனேஸ்வரி தாயினை தரிசனம் செய்தது. 1988ஆம் வருடம், ஜூன் 27 நாளன்று.. போகர் சித்தரின் ஜீவசமாதிக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்த கல்வெட்டினை அருகிலே பார்த்தது. பழனி ஊரிலுள்ள நகராட்சி நிர்வாகம் மோசமான சுகாதார கட்டமைப்பினை கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் குப்பையும், சேறும் சகதியுமாக இருந்ததை பார்க்க கஷ்டமாக இருந்தது. மதுரை மாநகரத்திலும் இதேபோன்று சுகாதார கட்டமைப்பு படுமோசமாக ஆகியுள்ளதை ஒப்பீடு செய்து பார்க்கும்போது எந்த மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 

Saturday, November 16, 2024

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் ஜீவசமாதி, திருவான்மியூர்..

2023ம் வருடம் வருகை தந்த புத்தாண்டு தினமாக(ஜனவரி 01) திருவான்மியூர் கடற்கரை அருகே கலாஷேத்ரா அருகிலுள்ள அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த கோவிலுக்கு விஜயமாகி பாம்பன் சுவாமிகளைப் பற்றி நீலிமா இசை பேசும் வீடியோ காணொளி..  


திருநெல்வேலி ஜில்லா, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் அரசனாக முடிசூடிக் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினமாக @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி..


வில்லிசேரி ஊருக்கு அருகிலிருந்து டூவீலரில் பயணமாக திருநெல்வேலி நகருக்குச் செல்கையில், கயத்தாறு ஊருக்கு முன்பாக கசத்தாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்கு விஜயமாகி கட்டபொம்மனின் பிறந்த நாளினை கொண்டாடும் விதமாக அன்பர்கள் அணிவித்த மலர் மாலைகளுடன் கம்பீரமாக காட்சி தந்த கட்டபொம்மனின் தங்கச் சிலையினை கண்டு வணங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளைப் பற்றிய வீடியோ காணொளி பதிவேற்றமானதை காண்கிறோம்.


முருகபெருமானின் அடியாராக மாறுவதற்கு முன்பு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமியின் பெயர் அப்பாவு என்பதை நீலிமா இசை சொல்கிறார். 


பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி கோவிலில் அடியாராக சேவை செய்யும் சுந்தர் அவர்கள் பேசுவதை கேட்கையில்.. 1929ம் வருடம், மே மாதம் 30ம் நாள் வியாழக்கிழமை அன்று.. சஷ்டி திதி, அவிட்டம் நட்சத்திரத்தில் அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த நிகழ்வினை சொல்கிறார். மூன்று ஏக்கர் பதினேழு சென்ட் நிலத்தினை ரூபாய் 450/-க்கு தன்னுடைய சொந்த செலவில் அன்றைய காலகட்டத்திலே பாம்பன் சுவாமிகள் வாங்கியதை அறிகிறோம்.


ஜீவசமாதி கோவிலின் உள்ளே இருக்கும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் புகைப்படம். 

மெட்ராஸ் என்ற பெரிய பட்டணத்திற்கு பாம்பன் சுவாமிகள் பிரவேசமான பிறகு 1923ம் வருடத்தில் ஒரு நாள்.. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஜட்கா வண்டியினுடைய சக்கரம் பாம்பன் சுவாமியின் காலில் மோதி காயமான பின்பு மெட்ராஸ் அரசு மருத்துவமனையின் மன்றோ வார்டில் சிகிச்சை பெற்றபோது ஸ்ரீசுப்பிரமணிய தாசர் எனும் பாம்பன் சுவாமியின் சீடர் சண்முக கவசத்தின் பாடலினை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த சமயமாக, பதினோராம் நாள் பாம்பன் சுவாமியின் காலிலுள்ள புண் நன்றாக குணமடைந்த அற்புதமான நிகழ்வினை நீலிமா இசை பேசுவதின் மூலமாக கேட்கிறோம்.



அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 99ஆம் ஆண்டு மயூர வாகன சேவை விழா 2022ஆம் வருடத்தின் டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு கோவிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்.


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமியின் கோவிலின் உள்ளே சந்நிதியின் முன்பாக உள்ள வீரவேல். வேலும் மயிலும் துணை..


ஜீவசமாதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தினை வாங்கி உண்டு மகிழும் நீலிமா இசை.




கந்தா கதிர்வேலா கார்த்திகேயா போற்றி..

Wednesday, November 13, 2024

திரியம்பகேஸ்வரர் கோவில்..

இந்திய நாட்டில் பரமேஸ்வரன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கமாக தரிசனம் தரும் கோவில்களில் ஒன்றான மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு நீலிமா இசை தன்னுடைய குழந்தைகள், கணவருடன் விஜயமாகி தனது ஆன்மீக அனுபவங்களை பேசும் யூடியூப் காணொளி. வரர் 


கடந்த வருடம் பிப்ரவரி 4 சனிக்கிழமை நாளன்று.. நீலிமா இசையின் @Neels யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி. கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் எனும் சிறப்பினை உடையது. பிரம்மகிரி, நீலகிரி, கமலகிரி எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் திரியம்பகேஸ்வர் கோவில் அமைந்துள்ளதை நீலிமா இசை சொல்கிறார்.


திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு உள்ளே அமிர்தவர்ஷினி குளம் எனும் தீர்த்தத்திற்குச் சென்று ஐந்து முகங்களை உடைய பரமேஸ்வரனை தரிசனம் செய்து பேசும் வேளை. கும்பமேளா தொடங்குவதற்கான முதல் நாளின் கொடி கட்டப்பட்ட தினமாக விஜயம் செய்த வைபவமாக, அடுத்த பத்து நாட்களுக்கு கோவிலுக்கு உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதை நீலிமா இசை சொல்கிறார்.


நீலிமா இசையின் சேனலில் பதிவு செய்துள்ள இந்த காணொளியில்.. நல்ல இசையமைப்பு, நேர்த்தியான படத் தொகுப்பு, ஒவ்வொரு இடங்களில் தரிசனம் செய்த சந்நிதிகளைப் பற்றி பேசும் விதம் பத்து நிமிடங்களில் அமையப்பெற்ற விதம் இதனுடைய சிறப்பு அம்சமாக உள்ளது. 


தன்னுடைய செல்லக் குழந்தையுடன் கோவிலின் வெளிச்சுற்று பிரகாரம் வெளியே நடந்து வரும் வேளையில்.


திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்த பின்பு ஆன்மீக அனுபவங்களை பேசும் வேளை.


கோவிலுக்கு உள்ளே அபிஷேகம் செய்த பின்பு லிங்கத்தினை தரிசனம் செய்யும் காட்சியின் அற்புதம்.


அனந்த பத்மநாபன் எனும் பெருமாளுடைய சந்நிதியில் தன்னுடைய செல்லக் குழந்தையுடன் தரிசனம் செய்யும் வேளை.


கோவிலுக்கு வெளியே திரியம்பகேஸ்வரரின் பிரசித்தி பெற்ற நெற்றித் திலகத்தினை தனது குழந்தைகளுடன் பெற்றுக் கொள்ளும் நீலிமா இசை..


திரியம்பகேஸ்வரர் கோவிலினுடைய உட்புறத்தில் நாம் பார்க்கும் அமிர்தவர்ஷினி குளத்தினுடைய பிரமிப்பான காட்சி.


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நமசிவாய..

Saturday, November 2, 2024

உலகளந்த பெருமாள் கோவில்.. காஞ்சிபுரம்..

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நீலிமா இசை.. காஞ்சிபுரம் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விஜயமாகி அங்கு இறைவனுக்கு அர்ச்சகர்களாக பணி செய்யும் அனுபவம் வாய்ந்த பெரிய மனிதர்களை நேர்காணல் செய்து கோவில்களை பற்றிய அத்தனை விஷயங்களையும் பேச வைத்து தன்னுடைய பங்களிப்பாக மேலும் பல ஆன்மீக விஷயங்களை பேசுகிறார். 

சுதந்திரப் போராட்ட வீரன் பகத்சிங்கின் பிறந்த நாளன்று @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி..

ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களில் "வாமன அவதாரம்" செய்த உலகளந்த பெருமாள் கோவிலை பற்றி @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை,,


யூடியூப்(YouTube) வீடியோ காணொளியிலிருந்து மொபைல் மூலமாக ஸ்நாப் ஷாட் எனும் புகைப்படங்களை உருவாக்க முடியும். மொபைலின் உள்ளே ஓடும் காணொளியை புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் இது ஒன்று. இத்தகைய ஸ்நாப் ஷாட் புகைப்படங்களின் மூலமாக வீடியோ காணொளியை பற்றி மேலும் பல விசயங்களை நாம் சொல்ல முடியும். வலைப்பூ வாசகர்களிடமும் எளிதாக கவனம் பெற்றுவிடும் சாத்தியம் உண்டு.

பெருமாளுக்கு பூஜை செய்விக்கும் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை. ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்த பாடலுடன் அர்ச்சகரே கோவிலின் சிறப்பை பற்றி பேசுவது, இந்த வீடியோ காணொளியின் சிறப்பு அம்சமாகும்.


கற்களில் செதுக்கப்படாத மூலிகைகள், தாவரங்களின் மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகளந்த பெருமாளின் சுதை சிற்பத்திலான மூலவருடைய தரிசனக் காட்சி. வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள் எனவும் சொல்லலாம்.

நூற்றி எட்டு(108) வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் ஐம்பதாவது திவ்விய தேசமாக போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.


கோவிலினுடைய வெளிப்பிரகாரத்தில் வழிபாட்டு முறைகளைப் பற்றி அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை.


நாதஸ்வரம் இசைக்கும் கோவிலின் கலைக் குழுவைச் சேர்ந்த சங்கீத சிரோன்மணி.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படும் கோதை நாச்சியார் ஸ்ரீஆண்டாள் தனது அப்பா பெரியாழ்வாருடன் ஒரே சந்நிதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


அர்ச்சகருடன் உரையாடிய பிறகு கோவிலைப் பற்றிய சுருக்கமான தகவலை பேசும் நீலிமா இசை.


வயர்லெஸ் மைக்ரோபோன் உதவியுடன் இரைச்சல் இல்லாத ஒலியுடன் ஒளிப்பதிவு செய்த உலகளந்த பெருமாள் கோவிலைப் பற்றிய வீடியோ காணொளியை பார்க்கும் நமக்கு அறுபது சதவிகிதம் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்த மகிழ்ச்சியை பெற முடியும் என்பது நூறு சதவிகித நம்பிக்கை எனச் சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணா..


ஓம் நமோ நாராயணா..

Tuesday, October 29, 2024

காரமடை அரங்கநாதர் கோவில்..

கொங்கு மண்டலத்தில் கோவை நகரிலிருந்து உதகைமண்டலம் செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் ஊருக்கு முன்பாக ஏழு கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர், காரமடை நகராட்சி. முதல் பஸ் நிறுத்தம் இறங்கி ஒரு கிமீ தொலைவு நடந்தால் அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்யலாம். திருமாலை வழிபடும் வைணவ கோவில்களில் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமானுஜர் திருத்தல யாத்திரை செய்தபோது இங்குள்ள காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்து சுயம்பு மூர்த்தியாக உருவாகி அருள்பாலிக்கும் அரங்கநாதரை வழிபாடு செய்த பேறு பெற்றமையால் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுவதாக அரங்கநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் சொன்னார். பெருமாளுடைய பிற கோவில்களில் உள்ள மூலவராக இல்லாமல், சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்புரிவது, இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும். 

அரங்கநாயகி தாயாரின் சந்நிதியை பார்க்கையில் ஆன்மீகப் பேராற்றுலடன் விளங்கியது. இராமயாணம் இதிகாசத்தில் பத்து தல ராவணனுடன், ஸ்ரீராமபிரான் போர் செய்யும் காட்சிகள் சந்நிதிக்கு முன்பு உள்ள தூண்களில் சிற்பமாக இருந்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது.


அஞ்சனையின் மகன் ஹனுமானுடைய புஜத்தில் அமர்ந்து கொண்டு பத்து தல ராவணனை நோக்கி பிரம்மாஸ்த்திரம் எய்து போர் செய்யும் ஸ்ரீராமபிரானுடைய சிற்பம். ஸ்ரீமந் நாராயணின் பக்தனாக அரங்கநாதரின் கோவிலுக்கு விஜயம் செய்த நாள்.. 2024ம் வருடம், அக்டோபர் 28, திங்கள்கிழமை...

ஸ்ரீராமஜெயம்.. ஜெய் ஹனுமான்..  


செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது அரங்கநாதர் கோவிலுக்கு நடத்திய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..  
தினம்: 2015ம் வருடம், ஜூன் 07.. ஞாயிற்றுக்கிழமை.. 

ஸ்ரீராமபிரானுடைய பிரம்மாஸ்த்திரத்தை மார்பில் வாங்கி தன்னுடைய உயிரை துறக்கும் பத்து தல ராவணனின் சிற்பம்.. அரங்கநாயகி தாயாரின் சந்நிதியில் ஸ்ரீமுருகபெருமானுக்கு வழங்கும் வீரவேலினை போல ராமயாணம் போர் காட்சிகளின் சிற்பங்களை பார்க்கும் நம்மை பிரமிக்க வைத்தது.

Wednesday, October 16, 2024

சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதம்..

பீஜப்பூர் சுல்தான் அதில்ஷாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது மராட்டிய பேரரசின் இளவரசனாக 1674ம் வருடம் முடிசூடிக் கொண்ட சத்ரபதி சிவாஜி எனும் இளைஞன் 1659ம் வருடம் நவம்பர் 10 தினமாக, பிரதாப்கர் என்ற இடத்தில் அப்சல்கானை சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தைக்காக சென்று பேசிக்கொண்டிருந்தபோது அப்சல்கான் மறைத்து வைத்திருந்த குறுவாளினை கொண்டு தாக்க முயற்சி செய்கையில், சிவாஜி கொண்டு சென்ற புலிநகம் எனும் கூர்மையான ஆயுதத்தை கை விரல்களில் மாட்டிக் கொண்டு குத்திக் கொன்ற பிறகு சத்ரபதி சிவாஜி என்ற இளைஞனின் பெயர் முகாலய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கும் பெயராக மாறியது. 


இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் அருங்காட்சியகத்திலிருந்து புலிநகம் ஆயுதம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு வரப்படும் ஜூலை 19 அன்று புதிய தலைமுறை யூடியூப் சேனலில் செய்தி வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தியது.  


ஜூலை 19 வெள்ளிக்கிழமை, சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் மைக்ரோசாஃப்ட் இணையத்தில் Death Of Blue Screen Bugsல் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளத்தின் முகப்பு பக்கம் முடங்கி செயல்படாமல் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல்போன சூழலில் உலகம் முழுமையும் உள்ள ஆயிரக்கணக்கான விமான சேவைகள் முடங்கிய நிகழ்வும் நடந்ததை காண வியப்பாக இருந்தது.  


புதியதலைமுறை எக்ஸ் முகவரியில் வெளியான செய்தி. கோவை புறநகரில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு விஜயமாகி நந்தி பகவானுக்குச் செய்யும் பிரதோஷ நிகழ்வினைக் கண்டு தரிசனம் செய்து கொண்டிருந்த வேளை, அர்ச்சகர் சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த சமயமாக இந்த செய்தியை கண்டு வியப்பாக இருந்தது.



இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பிறந்த நாளான ஜூலை 10 சென்ஸார் தேதியுடன் ரிலீஸான "மாவீரன்" படத்தினை ஜூலை 19 அன்று பார்த்த பிறகு மறுவருடம் அதே நாளன்று, சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலிநகம் ஆயுதம் இந்திய நாட்டிற்கு கொண்டு வரப்படும் செய்தி வெளியானதை கண்டது. அமெரிக்கா நாட்டில் செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பினை வகிக்கும் சத்யா நாதெள்ளா பிறந்த தினமாக, கோவை நகரின் அவிநாசி சாலையில் பன் சினிமாஸ் எனும் மல்டி ஸ்பெஷாலிட்டி திரையரங்கு 2012ம் வருடம், ஆகஸ்ட் 19 தினமாக திறப்பு விழா கண்டது.


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான கில்கிறிஸ்டின் எக்ஸ் முகவரி @Gilly381 சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதை பார்க்க முடிந்தது.

Friday, March 29, 2024

பிரம்மபுரீஸ்வரர் கோவில், சீர்காழி..

சீர்காழி ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி @Aalayamselveer (ஆலயம் செல்வீர்) யூடியூப் சேனலில் உள்ள வீடியோ காணொளி. 2018ஆம் வருடம் பிப்ரவரி 12 திங்கள்கிழமை.. ஆலயம் செல்வீர் யூடியூப் சேனல் உதயமான நாளாக உள்ளதை பார்க்கிறோம்.  


திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரத்தில் பாடல் பெற்ற பிரசித்தி பெட்ரா கோவிலாகும். இரண்டாம் திருமுறையில் பாடல் உள்ளது. 
பண்: இந்தளம்.. சோழநாடு, காவிரி வடகரை..

"பூந்தராய்" பாடல்..

செந்நெ லங்கழ னிப்பழ 
னத்தய லேசெழும் 
புன்னை வெண்கிழி யிற்பவ 
னம்புரை பூந்தராய்த் 
துன்னி நல்லிமை யோர்முடி 
தோய்கழ லீர்சொலீர் 
பின்னு செஞ்சடை யிற்பிறை 
பாம்புடன் வைத்ததே.

தேவாரத்தில் மொத்தம் பத்து பாடல்களுடன் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை என்று Shaivam.Org இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யூடியூப் இணையத்தில் ஒரு வீடியோ காணொளியை பார்க்கும்போது நம்மிடம் எந்த மாதிரியான அனுபவங்கள், சிந்தனைகள் உருவாகிறது என்பதைச் சொல்வது ஒரு வகையான நாட்குறிப்புகளை போன்றது. தொலைகாட்சி சேனல்களை மிஞ்சும் அளவிற்கு யூடியூப் சேனல்களில் பதிவேற்றமாகும் வீடியோ காணொளிகள் உலகமெங்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோவிலைப் பற்றி திருநெல்வேலி ஜில்லாவில் வசிக்கும் என்னைப் போன்ற ஆன்மீக அன்பர்களுக்கு தெரியவரும் பட்சத்தில், அந்தக் கோவிலைப் பற்றி யூடியூபில் தேடிப் பார்க்கையில் ஒரு வகையான பரவசம் உருவாகிறது. ஒரு முப்பது சதவிகிதம் அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனை தரிசனம் செய்த அனுபவம் உருவாகுவது, இத்தகைய தொழில்நுட்பத்தின் பெரும் கொடையாக உள்ளது.


2024ஆம் வருடம், மார்ச் மாதம், திங்கள்கிழமை.. பதிவேற்றமான வீடியோ காணொளி என்பதை பார்க்கிறோம். மார்ச் மாதத்தின் கடைசி வாரம்போல சரியான முடிவினை எடுக்க முடியாத சூழல் நிலவியபோது, கோவை நகரின் அவிநாசி சாலையில் ஹோப்ஸ் பகுதியிலுள்ள ஆர்கஸ் நகரின் உள்ளே ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருக்கையில் சீர்காழி ஊரிலுள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய இந்த வீடியோ காணொளியை பார்த்த பின்பு காலமும், நேரமும் நல்ல முறையில் உறுதுணை புரிந்தது. பரமேஸ்வரனுடைய ஆன்மீகப் பேராற்றல் எத்தகைய உருவத்திலும் வந்து நம்மை ஆட்கொண்டு யானை பலமுடன் நம்முடனே இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் தருணமாக திங்கள்கிழமை மாலைபொழுது அமைந்தது.


எட்டு அஷ்ட பைரவர்களை கொண்ட சந்நிதி இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய தல வரலாற்றினை ரிஷி குருக்கள் அருமையாக பேசுகிறார்.



கருவறையின் சந்நிதியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் அம்மன் திருநிலைநாயகி சந்நிதி..


கோவிலினுடைய சந்நிதிக்குச் செல்லும் முன்பு நம்மை வரவேற்கும் கொடிமரம்.


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நமசிவாய..