Saturday, November 2, 2024

உலகளந்த பெருமாள் கோவில்.. காஞ்சிபுரம்..

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நீலிமா இசை.. காஞ்சிபுரம் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விஜயமாகி அங்கு இறைவனுக்கு அர்ச்சகர்களாக பணி செய்யும் அனுபவம் வாய்ந்த பெரிய மனிதர்களை நேர்காணல் செய்து கோவில்களை பற்றிய அத்தனை விஷயங்களையும் பேச வைத்து தன்னுடைய பங்களிப்பாக மேலும் பல ஆன்மீக விஷயங்களை பேசுகிறார். 

சுதந்திரப் போராட்ட வீரன் பகத்சிங்கின் பிறந்த நாளன்று @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி..

ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களில் "வாமன அவதாரம்" செய்த உலகளந்த பெருமாள் கோவிலை பற்றி @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை,,


யூடியூப்(YouTube) வீடியோ காணொளியிலிருந்து மொபைல் மூலமாக ஸ்நாப் ஷாட் எனும் புகைப்படங்களை உருவாக்க முடியும். மொபைலின் உள்ளே ஓடும் காணொளியை புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் இது ஒன்று. இத்தகைய ஸ்நாப் ஷாட் புகைப்படங்களின் மூலமாக வீடியோ காணொளியை பற்றி மேலும் பல விசயங்களை நாம் சொல்ல முடியும். வலைப்பூ வாசகர்களிடமும் எளிதாக கவனம் பெற்றுவிடும் சாத்தியம் உண்டு.

பெருமாளுக்கு பூஜை செய்விக்கும் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை. ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்த பாடலுடன் அர்ச்சகரே கோவிலின் சிறப்பை பற்றி பேசுவது, இந்த வீடியோ காணொளியின் சிறப்பு அம்சமாகும்.


கற்களில் செதுக்கப்படாத மூலிகைகள், தாவரங்களின் மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகளந்த பெருமாளின் சுதை சிற்பத்திலான மூலவருடைய தரிசனக் காட்சி. வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள் எனவும் சொல்லலாம்.

நூற்றி எட்டு(108) வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் ஐம்பதாவது திவ்விய தேசமாக போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.


கோவிலினுடைய வெளிப்பிரகாரத்தில் வழிபாட்டு முறைகளைப் பற்றி அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை.


நாதஸ்வரம் இசைக்கும் கோவிலின் கலைக் குழுவைச் சேர்ந்த சங்கீத சிரோன்மணி.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படும் கோதை நாச்சியார் ஸ்ரீஆண்டாள் தனது அப்பா பெரியாழ்வாருடன் ஒரே சந்நிதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


அர்ச்சகருடன் உரையாடிய பிறகு கோவிலைப் பற்றிய சுருக்கமான தகவலை பேசும் நீலிமா இசை.


வயர்லெஸ் மைக்ரோபோன் உதவியுடன் இரைச்சல் இல்லாத ஒலியுடன் ஒளிப்பதிவு செய்த உலகளந்த பெருமாள் கோவிலைப் பற்றிய வீடியோ காணொளியை பார்க்கும் நமக்கு அறுபது சதவிகிதம் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்த மகிழ்ச்சியை பெற முடியும் என்பது நூறு சதவிகித நம்பிக்கை எனச் சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணா..


ஓம் நமோ நாராயணா..

Tuesday, October 29, 2024

காரமடை அரங்கநாதர் கோவில்..

கொங்கு மண்டலத்தில் கோவை நகரிலிருந்து உதகைமண்டலம் செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் ஊருக்கு முன்பாக ஏழு கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர், காரமடை நகராட்சி. முதல் பஸ் நிறுத்தம் இறங்கி ஒரு கிமீ தொலைவு நடந்தால் அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்யலாம். திருமாலை வழிபடும் வைணவ கோவில்களில் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமானுஜர் திருத்தல யாத்திரை செய்தபோது இங்குள்ள காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்து சுயம்பு மூர்த்தியாக உருவாகி அருள்பாலிக்கும் அரங்கநாதரை வழிபாடு செய்த பேறு பெற்றமையால் ஸ்ரீஅபிமான ஸ்தலம் என அழைக்கப்படுவதாக அரங்கநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் சொன்னார். பெருமாளுடைய பிற கோவில்களில் உள்ள மூலவராக இல்லாமல், சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்புரிவது, இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும். 

அரங்கநாயகி தாயாரின் சந்நிதியை பார்க்கையில் ஆன்மீகப் பேராற்றுலடன் விளங்கியது. இராமயாணம் இதிகாசத்தில் பத்து தல ராவணனுடன், ஸ்ரீராமபிரான் போர் செய்யும் காட்சிகள் சந்நிதிக்கு முன்பு உள்ள தூண்களில் சிற்பமாக இருந்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது.


அஞ்சனையின் மகன் ஹனுமானுடைய புஜத்தில் அமர்ந்து கொண்டு பத்து தல ராவணனை நோக்கி பிரம்மாஸ்த்திரம் எய்து போர் செய்யும் ஸ்ரீராமபிரானுடைய சிற்பம். ஸ்ரீமந் நாராயணின் பக்தனாக அரங்கநாதரின் கோவிலுக்கு விஜயம் செய்த நாள்.. 2024ம் வருடம், அக்டோபர் 28, திங்கள்கிழமை...

ஸ்ரீராமஜெயம்.. ஜெய் ஹனுமான்..  


செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது அரங்கநாதர் கோவிலுக்கு நடத்திய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..  
தினம்: 2015ம் வருடம், ஜூன் 07.. ஞாயிற்றுக்கிழமை.. 

ஸ்ரீராமபிரானுடைய பிரம்மாஸ்த்திரத்தை மார்பில் வாங்கி தன்னுடைய உயிரை துறக்கும் பத்து தல ராவணனின் சிற்பம்.. அரங்கநாயகி தாயாரின் சந்நிதியில் ஸ்ரீமுருகபெருமானுக்கு வழங்கும் வீரவேலினை போல ராமயாணம் போர் காட்சிகளின் சிற்பங்களை பார்க்கும் நம்மை பிரமிக்க வைத்தது.

Wednesday, October 16, 2024

சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதம்..

பீஜப்பூர் சுல்தான் அதில்ஷாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது மராட்டிய பேரரசின் இளவரசனாக 1674ம் வருடம் முடிசூடிக் கொண்ட சத்ரபதி சிவாஜி எனும் இளைஞன் 1659ம் வருடம் நவம்பர் 10 தினமாக, பிரதாப்கர் என்ற இடத்தில் அப்சல்கானை சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தைக்காக சென்று பேசிக்கொண்டிருந்தபோது அப்சல்கான் மறைத்து வைத்திருந்த குறுவாளினை கொண்டு தாக்க முயற்சி செய்கையில், சிவாஜி கொண்டு சென்ற புலிநகம் எனும் கூர்மையான ஆயுதத்தை கை விரல்களில் மாட்டிக் கொண்டு குத்திக் கொன்ற பிறகு சத்ரபதி சிவாஜி என்ற இளைஞனின் பெயர் முகாலய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கும் பெயராக மாறியது. 


இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் அருங்காட்சியகத்திலிருந்து புலிநகம் ஆயுதம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு வரப்படும் ஜூலை 19 அன்று புதிய தலைமுறை யூடியூப் சேனலில் செய்தி வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தியது.  


ஜூலை 19 வெள்ளிக்கிழமை, சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் மைக்ரோசாஃப்ட் இணையத்தில் Death Of Blue Screen Bugsல் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளத்தின் முகப்பு பக்கம் முடங்கி செயல்படாமல் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல்போன சூழலில் உலகம் முழுமையும் உள்ள ஆயிரக்கணக்கான விமான சேவைகள் முடங்கிய நிகழ்வும் நடந்ததை காண வியப்பாக இருந்தது.  


புதியதலைமுறை எக்ஸ் முகவரியில் வெளியான செய்தி. கோவை புறநகரில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு விஜயமாகி நந்தி பகவானுக்குச் செய்யும் பிரதோஷ நிகழ்வினைக் கண்டு தரிசனம் செய்து கொண்டிருந்த வேளை, அர்ச்சகர் சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த சமயமாக இந்த செய்தியை கண்டு வியப்பாக இருந்தது.



இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பிறந்த நாளான ஜூலை 10 சென்ஸார் தேதியுடன் ரிலீஸான "மாவீரன்" படத்தினை ஜூலை 19 அன்று பார்த்த பிறகு மறுவருடம் அதே நாளன்று, சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலிநகம் ஆயுதம் இந்திய நாட்டிற்கு கொண்டு வரப்படும் செய்தி வெளியானதை கண்டது. அமெரிக்கா நாட்டில் செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பினை வகிக்கும் சத்யா நாதெள்ளா பிறந்த தினமாக, கோவை நகரின் அவிநாசி சாலையில் பன் சினிமாஸ் எனும் மல்டி ஸ்பெஷாலிட்டி திரையரங்கு 2012ம் வருடம், ஆகஸ்ட் 19 தினமாக திறப்பு விழா கண்டது.


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான கில்கிறிஸ்டின் எக்ஸ் முகவரி @Gilly381 சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதை பார்க்க முடிந்தது.

Friday, March 29, 2024

பிரம்மபுரீஸ்வரர் கோவில், சீர்காழி..

சீர்காழி ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி @Aalayamselveer (ஆலயம் செல்வீர்) யூடியூப் சேனலில் உள்ள வீடியோ காணொளி. 2018ஆம் வருடம் பிப்ரவரி 12 திங்கள்கிழமை.. ஆலயம் செல்வீர் யூடியூப் சேனல் உதயமான நாளாக உள்ளதை பார்க்கிறோம்.  


திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரத்தில் பாடல் பெற்ற பிரசித்தி பெட்ரா கோவிலாகும். இரண்டாம் திருமுறையில் பாடல் உள்ளது. 
பண்: இந்தளம்.. சோழநாடு, காவிரி வடகரை..

"பூந்தராய்" பாடல்..

செந்நெ லங்கழ னிப்பழ 
னத்தய லேசெழும் 
புன்னை வெண்கிழி யிற்பவ 
னம்புரை பூந்தராய்த் 
துன்னி நல்லிமை யோர்முடி 
தோய்கழ லீர்சொலீர் 
பின்னு செஞ்சடை யிற்பிறை 
பாம்புடன் வைத்ததே.

தேவாரத்தில் மொத்தம் பத்து பாடல்களுடன் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை என்று Shaivam.Org இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யூடியூப் இணையத்தில் ஒரு வீடியோ காணொளியை பார்க்கும்போது நம்மிடம் எந்த மாதிரியான அனுபவங்கள், சிந்தனைகள் உருவாகிறது என்பதைச் சொல்வது ஒரு வகையான நாட்குறிப்புகளை போன்றது. தொலைகாட்சி சேனல்களை மிஞ்சும் அளவிற்கு யூடியூப் சேனல்களில் பதிவேற்றமாகும் வீடியோ காணொளிகள் உலகமெங்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோவிலைப் பற்றி திருநெல்வேலி ஜில்லாவில் வசிக்கும் என்னைப் போன்ற ஆன்மீக அன்பர்களுக்கு தெரியவரும் பட்சத்தில், அந்தக் கோவிலைப் பற்றி யூடியூபில் தேடிப் பார்க்கையில் ஒரு வகையான பரவசம் உருவாகிறது. ஒரு முப்பது சதவிகிதம் அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனை தரிசனம் செய்த அனுபவம் உருவாகுவது, இத்தகைய தொழில்நுட்பத்தின் பெரும் கொடையாக உள்ளது.


2024ஆம் வருடம், மார்ச் மாதம், திங்கள்கிழமை.. பதிவேற்றமான வீடியோ காணொளி என்பதை பார்க்கிறோம். மார்ச் மாதத்தின் கடைசி வாரம்போல சரியான முடிவினை எடுக்க முடியாத சூழல் நிலவியபோது, கோவை நகரின் அவிநாசி சாலையில் ஹோப்ஸ் பகுதியிலுள்ள ஆர்கஸ் நகரின் உள்ளே ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருக்கையில் சீர்காழி ஊரிலுள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய இந்த வீடியோ காணொளியை பார்த்த பின்பு காலமும், நேரமும் நல்ல முறையில் உறுதுணை புரிந்தது. பரமேஸ்வரனுடைய ஆன்மீகப் பேராற்றல் எத்தகைய உருவத்திலும் வந்து நம்மை ஆட்கொண்டு யானை பலமுடன் நம்முடனே இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் தருணமாக திங்கள்கிழமை மாலைபொழுது அமைந்தது.


எட்டு அஷ்ட பைரவர்களை கொண்ட சந்நிதி இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய தல வரலாற்றினை ரிஷி குருக்கள் அருமையாக பேசுகிறார்.



கருவறையின் சந்நிதியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் அம்மன் திருநிலைநாயகி சந்நிதி..


கோவிலினுடைய சந்நிதிக்குச் செல்லும் முன்பு நம்மை வரவேற்கும் கொடிமரம்.


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நமசிவாய..

Thursday, January 18, 2024

பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவில்.. கோவை..

பச்சைநாயகி அம்மன் உடனுறை பட்டீஸ்வரசுவாமி கோவில், கோவை நகரிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் பேரூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வலதுபுறமாக நொய்யல் ஆறு ஓடும் கால்வாய் அமைந்து மழை பெய்யும் காலங்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை பார்க்கலாம். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவை நகரில் சித்ரா விமான நிலையம் அருகிலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையிலுள்ள என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி படிக்கையில் 2005ம் வருடம் மார்ச் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை கொண்டப்பட்ட மஹாசிவராத்திரி விழா வைபவத்திற்கு பட்டீஸ்வரசுவாமி கோவிலுக்கு முதல் முறையாக விஜயமாகி தரிசனம் பெற்றது. பத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு இந்த 2024ஆம் வருடம் கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி விழா வைபவம், மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாளாக அமைந்து 2005ஆம் வருடத்துடன் நெருங்கிய தொப்புள் கொடி உறவாக அமைந்ததை கண்டு வியப்பாக இருந்தது. 


தேசமங்கையர்கரசி அவர்கள், பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலைப் பற்றிய தல வரலாற்றினை தன்னுடைய ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பல்வேறு விதமான அபூர்வமான விஷயங்களுடன் அருமையாக பேசுகிறார். @AthmaGnanaMaiyam யூடியூப் சேனல், சந்தனக் காட்டு சிறுத்தை என அழைக்கப்படும் வீரப்பனுடைய பிறந்த தினமாக 2015ம் வருடம் ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை அன்று உதயமானதை பார்க்கிறோம். ஆன்மீகப் பேச்சாளர்களில் கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற மனிதராக விளங்கிய கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவியாக அவருடைய பாடசாலையில் கற்றுத் தேர்ந்த தேசமங்கையர்கரசி அவர்கள், தமிழ் இலக்கியத்திலும், ஆன்மீகம் மற்றும் பக்தி இலக்கியத்திலும் மிகச் சிறப்பான புலமை ஞானத்துடன், கடுமையான பயிற்சியின் மூலம் சிறந்த பேச்சாளராக தமிழ்நாட்டின் ஆன்மீகப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க பெண்மணியாக, தமிழக அரசினுடைய கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.


2022ஆம் வருடம், ஜூலை 9 சனிக்கிழமை அன்று.. ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலைப் பற்றி தேசமங்கையர்கரசி பேசும் வீடியோ காணொளி பதிவேற்றம் ஆகியுள்ளது. 


பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவிலுக்கு உள்ளே விஜயமாகி பட்டீஸ்வரரின் சந்நிதிக்குச் செல்லும் முன்பு உள்ள மண்டபத்தின் மேல்விதானத்தில் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வருகை தந்து பட்டீஸ்வரரின் சுயம்பு லிங்கத்தின் மீது பாலினை சொரிந்து தினமும் தவத்தினை புரியும் விதமாக உள்ள தல வரலாற்றினை சொல்லும் விதமாக உள்ள பெரிய புகைப்பட கேலரியினை பக்தரான எஸ்.வி.சுப்பையா என்பவர்.. 1956ஆம் வருடம், டிசம்பர் 06 வியாழக்கிழமை அன்று கோவிலுக்கு அன்பளிப்பாக தந்த நிகழ்வு புகைப்படத்திலே எழுதப்பட்டுள்ளது.

Thursday, January 11, 2024

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில்..

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்த இடமுடன் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் நீலிமா இசை திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவிலுக்கு 2021ம் வருடம் வருகை தந்த மஹாசிவராத்திரி விழாவிற்கு விஜயாமாகி காக்கும் தெய்வம் காளியுடன் இணைந்து பரமேஸ்வரன் இரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய வரலாற்றினை தன்னுடைய @Neels (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அழகுற பேசுகிறார்.  


இறைவன் பெயர்.. ஆலங்காட்டு அப்பர் 
இறைவி பெயர்.. பிரம்மராளகாம்பால், வண்டார்குழலி 
மஹாசிவராத்திரி நாள்.. மார்ச் 11

பரமேஸ்வரன் காளியுடன் நடனமாடிய தலம். காக்கும் தெய்வமான காளி அன்னை உக்கிரமாக இருந்தபோது முஞ்சிகேச கார்க்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பரமேஸ்வரன் காளியுடன் நடனமாடி ஊர்த்துவ தாண்டவத்தால் வென்று காளியின் கோபத்தை தணித்தார். பரமேஸ்வரன் காளிக்கு அருள் செய்து வடாரண்யேசுவரராக எழுந்தருளி உள்ளார். இக்கோவிலுக்கு அருகில் காளிக்கு தனிக்கோவில் உள்ளது. 


பரமேஸ்வரனுடைய ஐம்பூத ஸ்தலங்களில் தண்ணீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஊரிலுள்ள ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு, கடந்த வருடம் டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் விஜயமானபோது, அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு செல்லும் பிரகாரத்தின் வழியில் வலதுபுறமாக உள்ள தூணில் ஆலங்காட்டு காளியின் சிற்பத்தின் எதிரில் ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனின் சிற்பத்தைக் கண்டு பிரமித்த வேளை, இரண்டு சிற்பத்திற்கும் நடுவில் அமர்ந்து மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் பாடல்களை அரை மணி நேரம் வாசித்து மகிழ்ந்தது.


ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனின் சிற்பத்திற்கு அருகில் எதிர்புறம் அமைந்த தூணில் பரமேஸ்வரனுடன் நடனமாடும் காளியின் சிற்பமும் இருப்பதை பார்த்த வேளை, அன்னை அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களில் நூற்றுக்கணக்கான பேர் காளியின் சிற்பத்தினை தொட்டு வணங்கியதை கண்டு பெரும் வியப்பாக இருந்தது.