இந்தியா முழுவதையும் வென்று விட்ட பிறகே தாய்நாடு திரும்புவேன் என்பதில் உறுதியாக இருந்தார் அலெக்ஸாண்டர்.
படை ராஜஸ்தானில் மாட்டிக்கொண்டது.
அனைவரும் தங்களுக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தனர்.இரக்கம் அற்றவர்;இதயத்தை ஏததென்சிலேயே இறக்கிவைத்தவர்..இப்படி திட்டிக் கொண்டே நடந்தனர்.இப்போது ஒரு பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதை கண்ட வீரன்...
மணலில் இருந்து அதைப் பிரித்து,தம் இரும்புத் தொப்பியில்
அள்ளி தம் தலைவனிடம் நீட்டினான்.
அலெக்ஸாண்டர் சொன்னார்:
இந்தத் தண்ணீரைவிட ஈரப்பசை மிக்க
உள்ளம் வாய்ந்த என் அன்புத் தோழனே!நன்றி.
எல்லோரும் குடிக்க நீர் இருந்து.குடித்த பின்
எஞ்சியிருந்தால் மட்டுமே நான் குடிப்பேன்.
இல்லையேல் எல்லோரோடும் சேர்ந்து இறந்துபோவேன்
வீரர்கள் சிலிர்த்தனர்;தம் தலைவனைப் புகழ்ந்தனர்.
No comments:
Post a Comment