Tuesday, July 23, 2013

நடிப்புக் கலையின் பிரதிநிதி!!

மாநகராட்சி மேயரை முதல் மனிதன் என்று அழைப்பார்கள்.அதுபோல இந்தியாவின் முதல் கலைஞன் என்று அழைக்கப்பட வேண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி.சிவாஜியின் 'வியட்நாம் வீடு' நாடகம் மியூசிக் அகாடமியில் நடந்த சமயம் ஒரு ரூபாய் டிக்கெட்டில் அந்த நாடகத்தை நான் பார்த்தேன்.நாடகம் முடிஞ்சி முக்கால் மணி நேரம் சிலையாக அரங்கிலேயே உட்கார்ந்துகிட்டு இருந்தேன்.கலைமகள் சரஸ்வதியைக் கலைக்குப் பிரதிநிதியாக நாம் வழிபடுகிறோம்.அது மாதிரி நடிப்புக் கலைக்குப் பிரதிநிதியாக வணங்க வேண்டியவர் சிவாஜி.சிவாஜியின் அரசியல் சேவையோடு ஒப்பிட்டால்,இந்த எம்.பி.பதவி அவருக்கு ஒரு சாதாரண ஆரம்பம்.


 - இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்...

No comments:

Post a Comment