Wednesday, July 24, 2013

அனுபவம் தந்த லட்சியம்!


மாலை நேரம்: " நண்பர்கள் இருவரும் விளையாட வரவில்லையே!"
வாசலையே பார்த்துக் கொண்டிரு ந்தார் மார்ட்டின் லூதர் கிங்.
நேரம் ஆக ஆக வராததால் வருத்தமுற்று அவர்களை கூப்பிட்டு வர ஓடினார்.தம் வீட்டுத் தெருவிலே இருந்த பலசரக்குக்கடையின்
தம்பதியினரின் குழந்தைகள் இருவரும் தான் மார்ட்டின் லூதர்கிங்கின் நண்பர்கள்- விளையாட்டுத் தோழர்கள்.


பலசரக்கு கடைக்குச் சென்ற லூதர்கிங்,
அவர்களை விளையாடக் கூப்பிட
பலசரக்கு கடைத் தம்பதியினர் லூதர்கிங்கிடம்
"உன்னோடு எல்லாம் விளையாட வரமாட்டார்கள்.
இங்கு நிற்காதே-போ போ! என நாயை
விரட்டுவது போல விரட்டினர்.

'ஏன்' என்று கேட்ட சிறுவனிடம்
'நீ' கருப்பன் என்றனர்.
புரியாமலும் - சினமுற்றும் - அழுகை பீறிட்டும்
வந்த சிறுவன் அன்று எடுத்த உறுதிதான்
பின்னாளில் 1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட
கறுப்பர்களுக்கு விடியலுக்கான வாசலாய் அமைந்தது.

No comments:

Post a Comment