நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோ விழாக்கோலத்தில் மிதந்து கொண்டிருந்தது.காரணம் அன்று டிசம்பர் 10.நோபல் பரிசு வழங்கப்படும் தினம்.பரிசு பெற்றவர் மிக முக்கியமான மாமனிதர் அவர்தான் மார்ட்டின் லூதர்கிங்!
"அமைதிக்கான நோபல் பரிசு" ஒரு கறுப்பரின் கரங்களில் தரப்பட்டது என்பது வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு.
இன விடுதலைக்கான முழக்கம் அமெரிக்கா எங்கும் ஓங்கி - ஒலித்து - உயர்த்தி - எழுச்சி பெற்ற நேரம் அது.
அகிம்சை வழியில் இனவிடுதலைக்காக
அணி திரட்டும் தம் தலைவனின் போராட்ட நகர்வுகளுக்காக
பேருந்துகளைப் புறக்கணித்து... கறுப்பின மக்கள் அனைவரும்
போராட்டத்தை நடத்தி உரமேற்றிக் கொண்டிருந்த காலம் அது.
"இன அநீதி என்ற நீண்ட இரவுக்கு முடிவுகட்ட
அமெரிக்காவின் 22 மில்லியன் கறுப்பின மக்கள்
ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்
இந்த நேரத்தில் அமைதிக்கான நோபல் பரிசை
நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்... என்று தொடங்கியது-
மார்ட்டின் லூதர்கிங்கின் ஏற்புரை...
ஒட்டுமொத்த கறுப்பின மக்களின்
போராட்ட நகர்வையும் பதிவு செய்தது அவ்வுரை...
இன்றுவரை மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வலைப்பூ:www.Senthilkrisnan.blogspot.com
No comments:
Post a Comment