Friday, July 26, 2013

உயிர் காக்கும் உத்தமர்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் அருகே உள்ள
மலைப்பாங்கான இடம் "திகேப்"

1800 ம் ஆண்டுகளில் இருந்தே இங்கு வந்து குதித்து தம்
உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் தற்கொலைப் பிரியர்கள்.
அங்கிருந்த சில நூறு அடித் தொலைவில் வசிப்பவர்
84 வயதுடைய தாத்தா டான் ரிச்சி.

அதிகாலையில் தன் வீட்டுச் சன்னலைத் திறந்து தற்கொலை
இடத்தின் மீது தன பார்வையைச் செலுத்த
ஆரம்பித்து விடுகிறார் இந்த தாத்தா.

யாராவது தற்கொலை செய்வதற்காக வருவதாகத் தெரிந்தால்
தம் ஊன்றுகோல் உதவியுடன் வேகமாக அவர்களிடம் சென்று
பேச்சு கொடுக்க ஆரம்பிப்பார்.
"ஏன் என்னுடன் நீங்கள் ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு
போகக் கூடாது" என்று கேட்பார்..மெதுவாக அழைத்து வந்து
அவர்களிடம் பேசி அவர்களை மனம் மாற வைத்துவிடுகிறார்..
இப்படி இவர் காப்பாற்றிய உயிர்களின் எண்ணிக்கை 160 பேர்.
(தினகரன்,மதுரை-16.06.2010)

காப்பாற்றும் போது இவரையும் இழுத்துக் கொண்டு 
குதித்த நிகழ்ச்சி - காப்பாற்றப்பட்ட சிலர் இவருடன் வந்து 
சண்டைபோடும் நிகழ்ச்சி 
இப்படி பல நிகழ்ச்சிகள் நடந்தும் 
மனம் தளராமல்பணி செய்கிறார் ரிச்சி...

No comments:

Post a Comment